பெங்சுயி : அதிர்ஷ்டத்தைத் தரும் தண்ணீர் !
பெங்சுயி ' என்பது சீன வாஸ்து கலை.' பெங் ' என்றால் காற்றுஎன்று அர்த்தம். ' சுயி ' என்றால் நீர் என்று அர்த்தம். சீனர்கள், இந்திய வாஸ்து தத்துவத்தைத்தான் பின்பற்றுகின்றனர் என்பதற்கு இதுவே சான்று.பஞ்சபூதங்களான நிலம் நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்துசக்திகளே இந்த பிரபஞ்சத்தை ஆட்டி படைப்பதாக அல்லது படைத்து ஆட்டுவதாகசீனர்கள் கருதுகின்றனர். இந்திய தத்துவ சாஸ்திரங்களும், வேதங்களும் இதையேகூறுகின்றன. இந்த ஐந்து சக்திகளால் தான் மனித உடல் ஆனது என்பதையும் இருநாட்டு கலாச்சாரங்களும் ஏற்கின்றன.
ஒரு வீட்டில் பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்தும் சரியான அளவில்இருக்குமானால் அங்கு ஒரு வசிய சக்தி ஏற்படும். அந்த வசிய சக்தி பணவசியத்தைத் தரும் ஐஸ்வர்யத்தை ஈர்க்கும். ஜன வசியத்தைத் தரும் . நமது தயவைநாடி அனைவரும் அங்கு வருவார்கள். இதை “பெங்சுயி” - “ பாகுவா” என்றுகூறுகின்றது.
அதாவது ' எட்டு திசைகள் ' என்று அர்த்தம். ஒவ்வொரு திசையும்ஒருவித சக்தியை கொண்டது . இந்த எட்டு சக்திகளும் எட்டு விதமான செல்வங்களைதரக்கூடியது . ஆகையால் எட்டு திசைகளிலும் சரியான சக்திகளை நிலைநிறுத்தினால் எட்டு விதமான செல்வங்கள் தருகின்றது.
1 .ஆரோக்கியம் தரும்கிழக்கு : கிழக்கு திசை ஆரோக்கியத்தை, உடல் நலத்தை குறிக்கின்றது. "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ” என்று கூறுகின்றோம். ஆக, கிழக்குதிசைக்கான சக்தியை பெங்சுயி மிகவும் நுணுக்கமாக கூறுகின்றது. சீனர்கள்ஐந்து விதமான சக்திகளை ( நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ) அப்படியே எடுத்துக் கொண்டாலும், ஆகாய சக்திக்கு சமமான சக்தி உலோக சக்திஎன்பதை கண்டுபிடித்துள்ளனர். இதைப்போல் காற்று சக்திக்கு சமமானது மரத்தின்சக்தி என்பதையும் கண்டுபிடித்துள்ளனர் . இவ்வளவு நுணுக்கமான அறிவு, புத்தமத ஜென் துறவிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய தவசக்தியினால் இதனைகண்டு உணர்ந்தனர். நமது வீட்டிற்குள் ( சொந்த வீடாக இருந்தாலும் சரி, வாடகை வீடாக இருந்தாலும் சரி ) வீட்டில் உள்ள அனைவரும் உடல் நலம் குன்றிநோய் வாய் படுவார்கள்.
வரும் பணம் எல்லாம் மருந்து வாங்குவதற்கேசெலவிடப்படும். அதோடு மட்டுமல்லாமல் வீட்டின் மூத்த மகனையும் இந்த கிழக்குதிசையும் குறிப்பிடும். வீட்டின் கிழக்கு பக்கம் சரி இல்லை என்றால் ' மூத்த மகனின் வளர்ச்சியையும் பாதிக்கும். படிப்பு தடைபடலாம். உடல்நோய்வாய் படலாம். முன்னேற வேண்டும் என்ற ஆசை ( Motivation )இல்லாமல்போகலாம். உங்கள் வீட்டின் கிழக்கு பக்கம் ! சரியாக இருக்கிறதா ? இல்லை ? என்பதை எப்படி தெரிந்து கொள்வது.!
1 .வீட்டின் கிழக்கு பக்கத்தில்டாயிலட் அல்லது பாத்ரூம் இருந்தால்.
2 .வீட்டின் கிழக்கு பக்கம் விளக்குமாறுஉள்ள அசுத்தமான பொருட்களை வைத்தாலும்.
3 .வீட்டின் கிழக்கு பக்கத்தில்கழிவு நீர் தொட்டி அமைந்திருந்தாலும்.
4 .வீட்டின் கிழக்கு பக்கத்தில்ஜன்னலோ, கதவோ அமைந்து. பக்கத்து கட்டிடத்தின் சுவர்குத்தாக இருந்தாலும்.
5 .வீட்டின் கிழக்கு பக்கத்தில் அறை இல்லாமல் , அது அடுத்த வீட்டில் அறையாகமாறினாலும் ( அப்பார்ட்மெண்டில் இது போல் இருக்கும் )
6 .வீட்டின் கிழக்கு பக்கத்திற்கு தேவையான சக்திக்கு பதிலாக மாறான சக்தி .அங்கு இருந்தாலோ அல்லது அதை ஒட்டிய சுவருக்கு அருகாமையில் இருந்தாலோ
உங்கள்வீட்டின் கிழக்கு பக்கம் சரியாக இல்லை என்று அர்த்தம் . இது மேலேகூறியுள்ள வீட்டில் உள்ள ஆரோக்கியத்தையும் , மூத்த மகனின் எதிர்காலத்தையும்பாதிக்கும் . கிழக்கு திசையை உடனடியாக சக்தி ஊட்டி சரிபடுத்துவது .ரத்தினகற்களில் அரசன் எனப்படும் . மாணிக்கம் ( Ruby )ஆகும் . பட்டைதீட்டப்படாத பூமியிலிருந்து அப்படியே எடுக்கப்பட்ட (Rough , Uncut ) மாணிக்க கற்கள் உடனடியாக கிழக்கு தசையில் சக்தியை தரும் அதாவது மூத்தமகனின்வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் . வீட்டில் உள்ள அனைவரும் நல்ல உடல்நலத்துடன் நிம்மதியான வாழ்க்கையைப் பெறுவார்கள்.
இதைபோல இந்தியன் ஜெடுஎன்று அழைக்கப்படும் நிற கற்களும் , ஜெடு அவேன்சுரின் (Aventurine )என்றபச்சை கற்களும் உடனடியாக கிழக்கு திசைக்கு சக்தியைத் தரும். பட்டைதீட்டப்படாத கார்னெட் கற்களும் இதே போன்று நல்ல பலனைத் தரும் . இதை தவிரவீட்டின் உள்ளே கிழக்கு திசையில் அகல இலை உள்ள செடிகளையோ குறு மரங்களையோ, மரச்சிற்பங்களையோ, பச்சை நிற பொருட்களை வைப்பதும் இந்த சக்தியைத் தரும்.
ஆனால் இவை வேலை செய்ய சில காலம் பிடிக்கும். இந்த திசையில் மீன் தொட்டிகள்அல்லது செயற்கை நீர் ஊற்று வைத்தாலே நல்ல பலனைத் தரும்.
பெங்சுயிதண்ணீரின் சக்தியை அபரிமிதமாக வர்ணிக்கிறது. ஒரு வீட்டில் தண்ணீர் அதிகமாகசெலவழிக்கப்பட்டால் ரொக்க பணம் தங்காது . அதிகமாக தண்ணீர் செலவழிந்தால்அது நமக்கு வரும் வாய்ப்புகளை இழக்கச் செய்யும்.
தண்ணீர் செலவழிய செலவழியரொக்க பணம் செலவழியும் வீட்டில் பணத்தை சேமிக்க முடியாது.
பெங்சுயி என்பது ஒரு மிக நுணுக்கமான கலை . சரியாக கையாளப்பட்டால் அதுவாழ்க்கையை செல்வ செழிப்பாக மாற்றி விடும் நாம் உபயோகிக்கும் தண்ணீரைசீனர்கள் ஒன்பது விதமாக கூறுகின்றனர் . அதாவது தண்ணீ ருக்கு 9 விதமானசக்திகள் . இருக்கின்றன.
1 .வெற்றியை தரும் தண்ணீ ர் ( Water for Success )தினமும் இந்த தண்ணீரை அருந்தி வந்தால் வாழ்க்கையில் வெற்றிநிச்சயம் . நாம் வாழும் இடத்தில் உள்ள நீரே இவ்வாறு மாறுகின்றது என்று சீனபெங்சுயி நிபுணர்கள் கூறுகின்றனர் .
நமது உடல் அதிர்வு , நாம் வாழும்வீட்டின் அதிர்வு இவை . இரண்டிற்கும் ஏற்றார்போல் நாம் வாழ்கின்ற நிலத்தின்நீர் ஒரு சக்தியையும் , ஒரு குணத்தையும் ஏற்றுக் கொண்டு சக்தி பெறுகிறது .என்று சீன அறிஞர்கள் கருதுகின்றனர். பெங்சுயி பற்றி நான் நடந்து ஒவ்வொருகருத்தரங்கத்திலும் இந்த நீர் எப்படிப்பட்டது என்பதை கூறி , அதன் சுவையைஅறிய சில சோதனைகளையும் செய்து உண்டு.
2 .செல்வ வளம் , பதவிஉயர்வு காண தண்ணீ ர் ( Water for prosperity and highrank )சீனாவில்வாழ்ந்த பண்டைய பிரபுக்கள் தங்களுடைய அதிகாரத்தை வளர்த்து கொள்ளவும் , தக்கவைத்து கொள்ளவும் , செல்வ வளத்தை பெருக்கிக் கொள்ளவும் இந்த தண்ணீரை பருகிவந்தனர் . இந்த தண்ணீரை கண்டுபிடிக்கும் முறையை எனது பெங்சுயிவகுப்புகளில் கலந்தவருக்கு கற்று
3 .உடல் நல ஆரோக்கியத்திற்கான தண்ணீர் ( Water for Good Health )தண்ணீ ரின்ஒரு சுவை நமது ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது . நாம் வாழும் இடத்தில் உள்ளநீர் , அது உப்பு நீராக இருந்தாலும் சரி , துவர்ப்பு நீராக இருந்தாலும் சரி , நமது மனநிலைக்கு ஏற்பவும் நமது சுற்றுப்புற சூழ்நிலைக்கு ஏற்பவும்மாறுகின்றது.
பண்டைய இந்திய மனையடி சாஸ்திரங்களில் இது பற்றி குறிப்பு உள்ளது.
துவர்ப்பு நில தண்ணீரின் சுவை அந்த இடத்தில் வாழ்பவர்களுக்கு பயத்தைதருமாம்!
புளிப்பு நிலத்திலிருந்து வரும் தண்ணீரின் சுவை கவலையும் , சஞ்சலத்தையும் ஏற்படுத்துமாம். கார்ப்பு நிலத்தில் உள்ள நிலத்திலிருந்துவரும் தண்ணீரின் சுவை பெரும் பசியை ஏற்படுத்துமாம். உவர்ப்பு நிலத்தில்உள்ள தண்ணீரின் நிலை கலக்கத்தை படைத்ததாம்.
இனிப்பு நிலத்திலிருந்து வரும்தண்ணீரின் சுவை மனிதனுக்கு மகிழ்ச்சியை தருமாம்.
இந்த நிலங்களில் வாழும்நாம் நிலங்களின் தன்மையை மாற்றவிட்டாலும் , தண்ணீரின் தன்மையை மாற்றமுடியும் என்று பெங்சுயி கூறுகிறது.
உங்கள் வீட்டின் உள்ளே எட்டுதிசைகளிலும் சரியான சக்திகளை நிலை நிறுத்தினால் அது நீங்கள் வாழும்தண்ணீரின் சுவையையும் மாற்றி விடுகிறது . அந்த தண்ணீர் வெற்றியை தரும்தண்ணீ ராகவோ அல்லது வாழ்வின் உயர் அதிகாரத்தை தரும் தண்ணீராகவோமாறிவிடுகிறது.
உடல் சுத்தத்திற்கும் , உள்ள சுத்தத்திற்கும் தண்ணீர் மிகஏற்றது என்று வேதங்கள் கூறுகின்றனர் . தண்ணீர் தெய்வீக தன்மைப் படைத்தது.
கங்கையை நினைத்து கொண்டு தண்ணீரை தொட்டாலே அது புனித ஜலமாகமாறுகிறது.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து கொண்டு அதன் மீது கையை மூடி, கங்கா ஸிந்துஸ்ய காவேரியமுனா, சரஸ்வதி, ரேவா மகாநதி கோதா, ஜலஸ்மின்இதம் சன்னிதவ்” , என்று இந்த மந்திரத்தை சொன்னாலே பாத்திரத்திலுள்ள நீர், கங்கை, யமுனை, சிந்து, சரஸ்வதி, காவேரி, நர்மதை, கோதாவரி போன்றதண்ணீரில் புனித தன்மை வந்து விடுகிறது என்று மந்திர சாஸ்திரங்கள்கூறுகின்றன.
“ யா ஸ்ம்ருதோச்சாரிதா த்ருஷ்டர் பீதாபாபா முபார்ஜிதம்
விநாசயதி கல்யாணி தாம் கங்காம் ஹ்ருதி பாவயே!!
மங்களம் அழிக்கும் கங்கைநதியை நினைத்தாலும், சொன்னாலும், பார்த்தாலும் கங்கை நீரை அருந்தினாலும்நாம் செய்த பாவங்கள் போய்விடுகின்றன. அப்படிப்பட்ட கங்கை நம் இதயத்தில், தியானிக்கின்றேன் என்று மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன . கருவை ம்ம் ம்வேதத்தில் பரமபவித்ரமாக தண்ணீர் பேசப்படுகின்றது. தண்ணீரை நாம் “நாம்கண்முன் காண்கின்ற தெய்வம்” ( பிரத்யக்ஷ தெய்வம் ) என்று வேதங்கள்போற்றுகின்றன . தண்ணீர் பற்றி வரும் மந்திரங்கள் ஜல அபிமான தேவதைகள் என்றுவேதங்கள் - பல போற்றுகின்றன.
நாம் செய்யும் எந்த ஒரு பிரார்த்தனையும், ஆகுதியையும் இறைவனிடம் சேர்பிக்க அக்னியும், ஜலமும், தெய்வீக தபால்காரர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
நாம் விரும்பிய பொருட்களை தெய்வத்திடம் சேர்க்க ஹோமமும் யாகமும் ஒருவழி. இதில் அக்னிபகவானிடம் சேர்க்கும் எந்த ஒரு பொருளும் இறைவனிடம் போய்சேர்ந்து விடுகிறது.
வாய் வார்த்தையாக கூறும் எதையும்இறைவனிடம் சேர்ப்பிக்க ஜலதேவதையே பொறுப்பு ஏற்கிறது . அந்த காலத்தில்குழந்தையை தத்து கொடுப்பவர்கள் கையில் நீரை எடுத்து நிலத்தில் தண்ணீரைவிட்டு குழந்தையை தத்து கொடுப்பதாக கூறுவார்கள்.
முனிவர்கள் நீரில் நின்று இருகைகளாலும், தண்ணீரை எடுத்து அர்கியம்கொடுப்பார்கள். இறந்தவர்களுக்கு தண்ணீர் மூலமாகவே சடங்கை செய்கிறோம்.
முனிவர்கள் சாபம் கொடுத்தாலும் தண்ணீரை கையில் எடுத்து சாபம் கொடுப்பார்கள்.
தினமும் காயத்ரி ஜெபம் செய்யும் அந்தணர்கள் சந்தியா வந்தன காலங்களில்கைகளில் நீரை எடுத்து காயத்ரி தேவதைக்கு மந்திரம் சொல்லி அர் கியம்கொடுத்து தங்களுடைய கடமைகளை நிறைவேற்றுவார்கள்.
காயத்ரி தேவதையை வழிபடும்பொழுது.
“ ஓம் ஜலப்ரியாயை நமஹ :
ஓம் ஜலகர்ப்பாயை நமஹ :
ஓம் ஜலாஞ்சரி ஸசந்துஷ்டாயை நமஹ”
என்று அஷ்டோத்திரம் கூறுகிறது.
ஜலத்தில் பிரியமுள்ளவள்என்றும், ஜலத்தில் தோற்றுவித்தவள் என்றும் ஜலத்தினால் நல்ல கர்மாவை செய்யதூண்டுபவள் என்று. இந்த மந்திரங்கள் கூறுகின்றன.
ஜலத்தை கையில் வைத்துகொண்டு பிரார்த்தனை செய்து அதை அருந்தினாலே நமக்கு நல்லது நடக்கும் என்பதைநிரூபிக்க இன்று விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
இப்படிப்பட்ட தண்ணீரின்மகிமையை பண்டைய சீன துறவிகளும் உணர்ந்து அறிந்து இருந்தனர்.
4 .தோல்விதரும் தண்ணீர் ( Water for bad luck ) : நாம் வாழும் வீட்டின்அப்பார்மெண்ட் ( வாடகை வீடு , சொந்த வீடு ) தண்ணீரே நமக்கு எதிராகமாறுகின்றது . இந்த வகை தண்ணீர் அருந்தினாலே
நமக்கு அது தோல்வியை தருகின்றது . இதையும் எங்களுடைய பெங்சுயிகருத்தரங்கில் விளக்கு வருகின்றோம்.
5 .கருவை கலைக்கும் ஆற்றல் பெற்றதண்ணிர் ( Wate for termination of pregnancy )நாம் வாழும் இடங்களிலுள்ளசில வகை தண்ணீருக்கு இந்த ஆற்றல் உள்ளது . எனக்கு பெங்சுயியை கற்று தந்த , சிங்கப்பூரை! சேர்ந்த மாஸ்டர் வீ - காக் - கு இது பற்றி கூறியது உண்டு.இந்த தண்ணீரை நான் பார்த்தது கிடையாது . தவ வாழ்க்கையை மேற்கொண்ட சீனபெங்சுயி நிபுணர்கள் மருத்துவ பயன்பாட்டிற்காக இந்த வகை தண்ணீரை சேர்ந்துவைப்பது உண்டாம் . இதை அவர் பார்த்து இருக்கிறார் !
6 .சமாதிக்கு பயன்படும் தண்ணிர் ( Water for Tomb )வாழ்க்கையின் நீட்டிப்பேசாவு ( Death is an extention of life )என்பது! சீனர்களுடைய தத்துவம் .நமது இந்து மதமும் இதையேதான் கூறுகிறது,அதனால் தான் இறந்தவர்களுக்குசடங்குகளை செய்து வருகிறோம். சீனர்கள் இறந்தவர்களின் சமாதியில் தினமும்தண்ணீர் விடுவது உண்டு. இதை தான் சமாதிக்கான தண்ணீர் என்று கூறுகின்றனர்.இந்த தண்ணீரின் ஜீவ சக்தி இறந்து போன பின்னும் வழிகாட்டும் தன்மைபடைத்ததாம்.
7 .முடிவை தரும் தண்ணீர் ( Water for death )மிகவும்வயதான சீன புத்த துறவிகள் தங்கள் வாழ்க்கையை முடிந்து கொள்ள வேண்டும்என்றால் இந்த தண்ணீரை தான் அருந்துவார்களாம். என்னுடைய பெங்சுயி மாஸ்டரானவீ - காக் - சூ ( Master Wee - kak cho0 )கூட இதை பார்த்தது இல்லையாம்.மிகப் பெரிய பிரபலமான துறவற வாழ்க்கை மேற்கொண்டு வரும் சீன பெங்சுயிமாஸ்டர்கள் இந்த மாதிரி ' தண்ணீர் ' களை கண்டறிந்து சேமிப்பு வைப்பதுவழக்கமாம். இவர் தங்களை சந்தித்து கொள்ளும் போது இந்த மாதிரி ' தண்ணீர் ' களைஒருவருக்கொருவர் பரிமாறி கொள்வது வழக்கமாம்.
8 .ஆயுளை நீட்டிக்கும் தண்ணீர்( Water for Longivity )
பெரும் யாகம் செய்தாலோ அல்லது நமது வீட்டில்ஹோமம் செய்தாலோ, ஒரு கும்பத்தில் தண்ணீரை வைத்து அதன் மீது தேங்காய்வைத்து பூரண கும்பம் என்று அழைப்போம். இந்த குடும்பத்திலுள்ள தண்ணீரைவருணன் என்ற தேவதை மந்திர பிரதிஷ்டை செய்து வழிபடுவோம். ஹோமத்தின்முடிவில் இந்த தண்ணீரை நம் மீது அபிஷேகம் செய்வார்கள் அல்லது நம் மீதுதெளிப்பார்கள் . குடிக்கவும் கொடுப்பார்கள். இந்த தண்ணீர் தீர்க்க ஆயுளைதரும் என்று மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றனர். இதைப்போல சிலவகை தண்ணீரின்சுவை அமிர்த சக்தி படைத்தது என்று சீன துறவிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
9 .வீட்டு உபயோகத்திற்கு குளிப்பதற்கான நீர் ( Water for house - use , bathing )
சாதாரணமாக நமது வீட்டில் அன்றாடமாக உபயோகிக்கப்படும்தண்ணீர் இது என்றே எடுத்துக் கொள்ளலாம். சீனர்கள் இவ்வாறு தண்ணீரின்ஆற்றலையும் அதை உபயோகிக்கும் அனுபவிக்கும் முறையையும் மூவாயிரம்ஆண்டுகளுக்கு முன்பே கண்டு உணர்ந்துள்ளனர். ஆனால் நமது இந்து மத மகரிஷிகளோபல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நமது தவ வலிமையால் உணர்ந்துஅறிந்து மந்திரங்களாக வெளிப்படுத்தின. ஆக கிழக்கு திசையில் தண்ணீர் என்றதெய்வ சக்தி அற்புதமான ஆற்றலை வெளிப்படுத்தி வீட்டில் ஆரோக்கியமானவாழ்விற்கும், மூத்த மகனின் வளமான எதிர்காலத்திற்கும் வழிகாட்டும்.
எட்டுதிசைகளில் கிழக்கு திசையின் சக்தியையும் அது தரும் பலனையும் பார்த்தோம்.
பெங்கயியில் பாகுவா கத்துவம் ( sinion Town )எட்டு வகை செல்வத்தை கொண்டுவருவது எப்படி என்பதை விளக்குகிறது.
ஒரு மனிதன் நிறைவான வாழ்ககையை டக்கவேண்டு மென்றால் அவள் எட்டு விதமான புருஷார்த்தங்களை அடைய வேண்டும் என்பதுசீனர்களின் கருத்து.
அவை:
1 கல்வி - வடகிழக்கு திசை
2 .நோயற்ற வாழ்வு -கிழக்கு திசை
3 .நல்ல மனைவி குடும்ப வாழ்க்கை - தென்மேற்கு திசை
4 .நல்லகுழந்தைகள் – மேற்கு
5 .நல்ல தொழில் அல்லது நல்ல வேலை அதிகாரம் , பதவி - வடக்கு
6 .புகழ் – தெற்கு
7. அதிர்ஷ்டம் பணப்புழக்கம் மனிதமுயற்சிக்கான பலன்– தென் கிழக்கு
8 .தெய்வ அருள். பெரியோர்களின் ஆதரவு, வாழ்க்கையின் குறிக்கோள், செல்வம்நண்பர்களின் உதவி - வட மேற்கு