ரத்தின கற்களுக்கு இயல்பாகவே தெய்வீக தன்மை உண்டு. ரத்தினக்கல்அணிவதால் இந்த இறை சக்தி அல்லது தெய்வ சக்தி நமக்கு வழிகாட்டும். தேவையாகஅமைக்கிறது. "ரம்" என்ற அக்னி பீஜத்திலிருந்து ரத்தினங்கள் என்றவார்த்தை பிறந்தது. ருக் வேதத்தில் முதலாவது அத்தியாயத்தில் அக்னி தேவதையை “ரத்தின தேவாத்மன்' என்று சொல்லப்படுகின்றது. அக்னி தேவன் தேவதைகளின்தூதன். எந்த ஒரு தேவதைக்கும் யாகத்தின் மூலமாக அக்னி மூலமாக நாம்எல்லாவற்றையும் சமர்பிக்கின்றோம். நமது பிரார்த்தனை கூடதான். ஆகரத்தினங்கள் அக்னி தேவதைக்கு சமமானவை . நம் பிரார்த்தனைகளை , நம்கோரிக்கைகளை, நம் உள்ளத்தின் ஆசைகளை நிறைவேற்றும் சக்தி ரத்தின கற்களுக்குஉண்டு.
கார்னெட் எனப்படும் ரத்தினகற்களுக்கு இந்த சக்தி மிக அதிகம்.இன்றைக்கு கிட்டதட்ட 1200ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அதாவது கி.பி.8ஆம் நூற்றாண்டு எழுதப்பட்ட“ரஸஜல நிதி” என்ற புத்தகத்தில் கார்னெட்க்குவைக்ரந்தம் என்று பெயரிடப்பட்டுள்ளது.“வை” என்றால் வசு அல்லது பணம்என்பது அர்த்தம். "க்ரந்தம்"என்றால் ஈர்ப்பு தன்மை படைத்தது என்றுஅர்த்தம். ஆக வைக்ரந்தம் என்றால் செல்வத்தை ஈர்க்கும் தன்மை படைத்தது.கார்னெட் என்ற கல்லை அணிந்தாலே செல்வம் சேரும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
வைக்ரந்தம் என்ற இந்தக் கல் ஐஸ்வர்ய விருத்தி , காரிய சித்தி, சத்ருஜெயம் ஆகிய மூன்றையும் ஒருங்கே தர வல்லது. ஆழ்ந்த சிவப்பு நிறமும், சிவப்பு நிறம், அரக்கு சிவப்பு நிறமும், ஊதா சிவப்பு நிறமும் கொண்டகார்னெட் ஆக்கபூர்வமாக திறனை அளிக்க வல்லது.
வாழ்க்கையில் தன்னை தனியாக எந்த ஒரு பெரிய செயலை சாதிக்கும் திறனைதரக்கூடியது கார்னெட்.
கார்னெட் தனிநபர் கவர்ச்சியை அதிகப்படுத்தும்.நீங்கள் எங்கும் சென்றாலும் அனைவரின் கண்களும் உங்களை நோக்கக் கூடிய ஒருசக்தியை கார்னெட் தரும்.
மூலதார சக்கரத்தை தூண்டி விடும் ஆற்றல்படைத்தது. ரோடோலைட், ஸ்பெசர்டைன், அலெமன்டைன், பைரோ, கிரசுலார்ஆந்த்ரடைட் என்று ஆறு வகையில் கார்னெட் கிடைக்கின்றது.
கோமேதகம் என்பதுகார்னெட் குடும்பத்துடன் சேர்ந்த ஒரு ரத்தினகல் ஆகும். இதற்குஆங்கிலத்தில் ஹேஸோனைட் என்று பெயர்.
பச்சை நிற கல்லில் வரக்கூடியகார்னெட்டுக்கு யுவாரோ வைட் என்று பெயர். ரோடோலைட் கார்னெட், யுவாரோ வைட்கார்னெட் விலை மதிப்பற்றது.
உங்களுக்கு பிறந்த நட்சத்திரமும், தேதியும் தெரியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். அனைவருக்கும் நன்மைஅளிக்க கூடிய தன்மை படைத்தது கார்னெட்.
கால்சியம், அலுமினியம், மக்னீசியம், மாங்கனெஸ், பெர்ரஸ், சோடியம், டைட்டனியம், ஸிர்கோனியம்போன்ற பல வகை தாது. உப்புகளால் ஆனது கார்னெட். பூமியின் ஆழத்தல் 4000டிகிரி செண்டிகிரேட் வெப்பத்தில் உயர் அழுத்தத்தில் 22பட்டைகள் முதல் 51பட்டைகள் வரை இயற்கையாக ரத்தினகற்களாக மாறுகின்றது கார்னெட்,
கார்னெட் ரத்தின கற்கள் அணிந்த 48 மணி நேரத்திலிருந்து90நாட்களுக்குள்அதன் பலன் தெரிய துவங்கும்.
துர்கை, முருகன், அக்னி ஆகிய தேவதைகள்சக்தியுள்ளதோ, அதே சக்தி கார்னெட்டுக்கும் உண்டு என்று அக்னி புராணம்கூறுகின்றன.
இந்த ரத்தினகற்கள் அணிபவர்கள் அதை கங்கை அல்லது காய்ச்சாதபாலும் (பச்சை பாலில்) கழுவினால் அதில் நம்மால் ஏற்படும் தோஷங்கள்நீங்கும்.
தீட்டு இடங்களுக்கு செல்வது, வேண்டாத உணவுகளைஉண்பது போன்ற நம்மால் ஏற்படும் தோஷங்கள், ரத்தின கற்களில் இருந்து நீக்கி, வாரம் ஒரு முறை பச்சை பாலில் கழுவுவது நல்லது. அல்லது கோவிலுக்குசெல்லும் போது அபிஷேக தீர்த்தம் கார்னெட் மோதிரத்தை கழுவுவது நல்லது.
கார்னெட் ரத்தினக் கற்களை வெள்ளியில் தான் அணியவேண்டும்.