பிளட் ஸ்டோன் (BLOOD STONE)
பிளட்ஸ்டோன் ஸ்படிக வகை இனத்தை சேர்ந்தது. இயல்பாகவேதெய்வீக தன்மை படைத்தது. பிளட் ஸ்டோன் என்றால் இரத்த நிறத்தில் கண்ணாடிகல் போல் இருக்கும் என்று நினைக்க வேண்டாம். பச்சை நிற கல்லில் சிவப்புபுள்ளிகள் இருக்கும். அதுதான் பிளட் ஸ்டோன்.ஆன்மீக வாழ்க்கையில்முன்னேற்றத்தை தரக்கூடிய ரத்தின கல் இது ஆகும். இந்த ரத்தினக் கல்மூலாதாரம், மணிபூரகம். ஆனாஹதம், ஸ்வாதிஷ்டானம் ஆகிய நான்கு சக்கரங்களின்சக்தியை எழுப்பக்கூடியது. உங்களை சுற்றி உள்ள சக்தி மண்டலத்தில்மாற்றத்தை ஏற்படுத்தி முன்னேற்றத்தை தரக்கூடியது. உடனுக்குடன்அவ்வப்பொழுது ஏற்படும் மாற்றத்தை சீராக்கக் கூடிய தன்மை படைத்தது. உடல்அளவில் மனது அளவில் நல்ல விவேகத்தை கொடுத்து நட்பை நீடிக்கக்கூடியது.
சுயநலமற்ற ஆக்கபூர்வமான பொது சேவைகளை நடந்துவோருக்குஉதவக்கூடியது. தவம்கடுமையான விரதங்கள் போன்று ஆன்மீக சாதகர்களுக்கு இந்த ரத்தின கல் ஒரு அறியபொக்கிஷமாகும். இரத்த சம்பந்தமான நோய்களுக்கு இந்த இரத்தினகல் ஒருஅருமருந்து. உடலிலுள்ள விஷ சத்தை எடுத்துவிடும்.
கழுத்தில் பதக்கமாகஅணிந்து கொண்டோ இடது கையில் வைத்து கொண்டோ தியானம் செய்தால் தெய்வீகஅனுபவம் பெருகும். இதை வீட்டில் வைத்து கொண்டாலே வீட்டில் பிராண சக்திபெருகும் என்று சீன வாஸ்துகலையான பெங்சுயி கூறுகிறது.
”யின்யாங்" சம சக்தி சீர் நிலையை இந்தக்கல் தருவதால் வீட்டில் நல்இணக்கத்தையும், அமைதியையும் ஏற்படுத்தும். கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து போன்ற விளையாட்டுகாரர்களுக்கு இந்த இரத்தினக்கல் ஒருவரப்பிரசாதம்! ஆகும்.
விளையாட்டு துறையில் வெற்றியும், புகழையும் ஈட்டுதரக்கூடிய ஒரு இரத்தின கல்லாகும். பண்டைய எகிப்திய மன்னர்களாலும், குருமார்களாலும் மதிக்கப்பட்ட இந்த இரத்தினக்கல்! அவர்களுடையமார்புகவசத்தை அலங்கரித்தது. எகிப்திய மன்னர்களும், குருமார்களும்தாங்கள் நடத்திய அற்புதங்களுக்கும், அதிசயங்களுக்கு இந்த இரத்தின கல்லைஉதாரணமாக காட்டுகின்றனர்.
சோர்ந்த தோள்கள் புடைத்து நிற்கும்
நரம்புகள் முறுக்கேறும்
செயலில் இறங்குவீர்கள்
வெற்றி தோல்வியை பற்றிய எண்ணம் இருக்காது.
இலக்கை அடைவீர்கள்!!!
பெருமித பெருமூச்சு கிளம்பும்!
இது அனுபவ உண்மை!
நல்லபடி வாழ…! உலக புற்றுநோய் நிபுணர் கூறும் வழி!!
உலகத்தின்தலைசிறந்த புற்றுநோய் நிபுணரான பெர்னி சீ கல் ( Bernie Siegel )கூறும் சிலவழிகள்!
என்ன என்ன வழியை கடைபிடித்தால் நோய் வரும் என்பதை தெரிந்துகொண்டாலே நல்ல வழி புலப்பட்டு விடும்.
நோய் வருவதற்கான சில வழிகள்!
1 .உங்கள் உடல் மீது அக்கறை செலுத்தாதீர்கள்.
2 .நிறைய மது குடியுங்கள்.
3 .இஷ்டத்திற்கு தின்னுங்கள் . அகவயங்கள்,
4 .செக்ஸ் பைத்தியம் பிடித்துஅலையுங்கள்.
5 .இப்படி செய்கிறோமோ என்று துளி கூட கவலையே - படக்கூடாது.
6 .வாழ்க்கையே அர்த்தமுள்ளதாகவோ அல்லது புனிதமாக உள்ளதாகவோ ஆக்கிகொள்ளாதீர்கள்.
7 .நிறைய சிகரெட் பிடியுங்கள்.
8 .எப்பொழுதுமே குறைகூறுங்கள்.
9 .கெடுதலே நடக்கும் என்று திடமாக நம்புங்கள்.
10 .கவலைப்படுங்கள். மனதிலே கவலையே நினைத்து நினைத்து அதன் எல்லைக்குசெல்லுங்கள்.
11 .யாருடனும் நெருங்கிய தொடர்பு வைக்காதீர்கள்.எல்லோரையும் திட்டுங்கள்
12 .நேர்மை, உண்மை, பணிவு, அடக்கம், உழைப்பு போன்ற நல்ல பழக்கங்களைகண்டால் எள்ளி நகையாடுங்கள். ஏளனம் செய்யுங்கள். சிரியுங்கள்.
13 .மேலே கூறியவற்றை தவறாமல் கடைபிடியுங்கள். அதை யார் தடுத்தாலும் அவர்களைதண்டியுங்கள்.
போதுமா? செய்ய வேண்டாதவன எல்லாவற்றையும் பட்டியலிட்டுதந்தாகிவிட்டது என்கிறார். டாக்டர் பெர்னி சீகல் . சாவின் விளிம்பில்நின்று தட்டு தடுமாறும் நூற்றுக்கணக்கான புற்று நோய்காரர்களுக்கு வளமானவாழ்வை காட்டும். டாக்டர் பெர்னி சீகல் கூறும் சில நல்ல யோசனைகளையும்கேட்போமா?
1 .வாழ்விற்கு அர்த்தம் , ஆத்ம திருப்தி தரும் செயல் ஒன்றைதினமும் செய்யுங்கள்.
2. வாழ்க்கை என்பது உங்களுடைய படைப்பு ஸ்ருஷ்டி . அதைஅர்த்தமுடையதாக ஆக்குங்கள்.
3 .உன்னையே நீ எண்ணிப் பார். உங்களது மனம், உடல், ஆத்மா போஷித்து வளப்படுத்த, ஊக்கப்படுத்துவதற்கான செயலில்இறங்குங்கள்.
4 .கோபம் வரும் போதோ, பொறாமை வரும் போதோ வருத்தம் ஏற்படும்போதோ, அச்சப்படும் போதோ சிரியுங்கள். அந்த உணர்ச்சிக்கு ஏற்ப தக்கஉணர்ச்சியை ஏற்படுத்துங்கள். மகிழ்வுடன் இருங்கள்.
5 .அன்பு ஒன்றேஅடிப்படையாக கொண்டு வாழ்வின் எல்லா சமயங்களையும் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையின் லட்சியத்தை மனதில் உருவகப்படுத்துங்கள்.அதை அடைவதாக எண்ணி களிப்போடு இருங்கள்.
6 .எப்பொழுதும் நகைச்சுவையுடன் ஜாலியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
7 .எல்லோருடனும் சகஜமாக பேசக் கற்றுக் கொள்ளுங்கள்.
8 . உங்களைச் சுற்றிஉள்ளவர்களுக்கு ஆக்கபூர்வமான ஒரு எடுத்துக்காட்டாக இருங்கள்.
9 .உங்கள் உடல்நலனை பேணுங்கள். அவ்வப்போது உடல் நலம் பற்றி புத்தகங்களை படிப்பது, அதுபற்றிய நிபுணர்கள் சந்தித்து உரையாடுவது நல்லது.
10 .தவறு செய்தால் …….உங்களையும் மன்னியுங்கள், மற்றவர்களையும் மன்னியுங்கள். கடந்த காலவருத்தமான சம்பவங்களையும், தவறுகளையும் மறந்து விடுங்கள். சிரிப்போடுவாழக் கற்றுக் கொள்ளுங்கள்.