No results found

    வயதான வீட்டை இடிப்பதா...?

    நல்ல முறையில் உறுதியாக உங்கள் வீடு அமைந்திருந்தால் அதை இடிக்க வேண்டிய அவசியம் இல்லை

    ஆனாலும் வாஸ்து சாஸ்திரம் ஒரு வீட்டில் தெய்விக சக்திகள் அறுபது வருடங்கள் மட்டுமே தாங்கும் என்றும் அதன் பிறகு புதியதாக அந்த சக்திகளை வீட்டிற்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்று சொல்லுகின்றன

    இப்படி சொல்வதை தான் சிலர் தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டு வயதான வீட்டை இடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்

    புதியதாக தெய்வ சக்திகளை வீட்டிற்கு கொண்டுவர வேண்டுமென்றால் அதற்கு இடித்தலை தவிர வேறு சில நல்ல வழிகளும் உள்ளன

    அதாவது சிறிய ஓட்டை உடைசல்களை சரி செய்து புதிய வர்ணம் தீட்டி நவக்கிரக ஹோமம் சுதர்சன ஹோமம் இவற்றுடன் வாஸ்து சாந்தி ஹோமம் போன்றவற்றை செய்ய வேண்டும்

    மிக முக்கியமாக குலதேவதை இஷ்டதேவதை போன்றவைகள் வீட்டிற்குள் நிரந்தரமாக வாசம் செய்ய லஷ்மி நாராயண ஹோமம் செய்ய வேண்டும்

    இப்படி செய்து வீட்டிற்குள்ளேயே அன்றைய தினத்தில் உறவினர் மற்றும் ஏழைகளுக்கு அறுசுவை விருந்து கொடுக்க வேண்டும்

    இயன்ற வரையில் வஸ்திர தானம் செய்வது நல்லதாகும் இப்படி செய்தாலே போதுமானது

    முப்பாட்டன் கட்டிய வீட்டில் சந்தோசமாக வாழலாம்

    Previous Next

    نموذج الاتصال