ரேகியும் – நவரத்தினக்கற்களும்
ரேகி என்றால் என்ன?
முதலில் ரேகி என்றால்Universal Life Foreceஎன்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள் . ரேகி ஜப்பானிவார்த்தை . ஜப்பானிய மொழியில் ரேகி என்று சொல்கிறார்கள். ரேகி என்பது Rei - Ki ( ரேகி ), ( Rei )ரே என்பது Universe , ( Ki )கி என்பது Life Force .அந்த மின் காந்த சக்தியை Universal Life Forceஎன்று சொல்கிறோம் . அண்டசராசரத்தில் நிரம்பி இருக்கின்ற காந்த சக்தியை, மின் காந்த சக்தியை ( Universal Life Force ) " தலை வழியாக எடுத்து “ கை ” வழியாக பாய்ச்சும்முறையைத்தான் ரேகி என்கிறோம்.
ரேகி என்பது ஞானமும், உண்மையும் ஆகும்.ஹவாயோ டகாடா. என்ற மூன்றாவது ரேகி கிராண்ட் மாஸ்டர் மூலம் இந்தியாவிற்குவந்தது. ரேகியை அண்ட சராசரத்திலிருந்து வரும் உயிர் ஆற்றல் சக்தி என்றுசொல்லலாம். உஷீஇ முறை ரேகியானது. மிகவும் சுலபமானதும் இயற்கையாகவேகுணப்படுத்தும் ஆற்றலும் உடையது. இது மட்டுமல்லாமல் உயிர் ஆற்றல் சக்தியைமிகவும் சிறந்த முறையில் ஒருவரிடத்திலிருந்து மற்றவருக்க பரிமாற்ற வல்லது.ஒரு முறை ஒருவர் ரேகி பரிமாற்ற கருவியாக அவரை திறந்து விட்டால் , அவருடையகைகளிலிருந்து அடர்த்தியான உயிர் ஆற்றல் சக்தியானது தானாகவே வெளியேறத்தொடங்கும்.
இந்த தன்மையை அவருடைய வாழ்நாள் முழுவதும் அவர் பெற்றிருப்பார்.ரேகி சுயமாக தன்னைத்தானே குணப்படுத்தும் திறமையை கொடுக்கவல்ல மிகவும்சக்தி வாய்ந்த ஆற்றலாகும். இது முழுமையான ஓய்வையும் கொடுக்கக்கூடியது. “ ரே ” என்றால் அண்ட சராசரம் என்று பொருள்படும். “ கி ” . என்பது பிறரைகுணப்படுத்துபவர்கள் பயன்படுத்தக்கூடிய வெளியே புலப்படாத ஒரு சக்தியாகும்.“ கி ” என்பது நம் அனைவரையும் சூழ்ந்து உள்ளது. இதை ஒருங்கிணைத்துநம்முடைய மனத்திற்கு ஏற்றபடி கட்டுப்படுத்தலாம். ரேகி ஆற்றல் எல்லாஉயிரினங்களுக்கும் ஊட்டமளிக்கிறது. ஒருவர் உயிருடன் இருக்கும்வரை உயிர்ஆற்றல் சக்தி சுழன்று கொண்டே அவரை சுற்றி இருக்கும்.
அவர் இறந்த பிறகுஇந்த உயிர்ஆற்றல் அவரை பிரிந்து விடும். உங்களுடைய உயிர் ஆற்றல் சக்தி குறைவாகஇருந்தாலோ அல்லது உயிர் ஆற்றல் சக்தியின் ஓட்டத்தில் ஏதாவது தடை இருந்தாலோ, உங்களுக்கு நோய்களை தடுக்கும் சக்தி குறைவாக இருக்கும். அதனால் பலநோய்கள் உங்களை தாக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். இந்த உயிர் ஆற்றல்சக்தி அதிகமாக இருந்தாலும் அதன் ஓட்டம் சீராக இருந்தாலும் உங்களை நோய்கள்அதிகம் தாக்காது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இந்த உயிர் ஆற்றல்சக்தியானது மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்த சக்தி நமக்கஊட்டமளிக்கிறது. இதுவே நமது உணர்ச்சிகள், ஆகியவற்றிற்கு முதன்மையானசக்தியாக எண்ணங்கள், புனித வாழ்க்கை விளங்குகிறது.
ரேகி ஆற்றல் 1800 இறுதியில் டாக்டர் மிகாவ் உஷ " இ என்ற பெரிய மகான் கண்டுபிடித்தார் .ரேகியும் நவரத்தினக் கற்களும். ரேகி என்ற பிரபஞ்ச சக்தியோடு ஸ்படிகங்கள் ( Quartz Crystal )அல்லது (Gemis)நவரத்தினக் கற்களை இணைத்து செய்தால்மூன்று விதமான பலன்கள் உண்டு. படிகங்களில் இயற்கையிலேயே உள்ள நோய்தீர்க்கும் குணமும், நிறங்களின் அதிர்வுகளுக்கு உள்ள குணமும் சேர்ந்து ( Colour Therapy )வியாதியை வெகு விரைவில் குணப்படுத்துகின்றது.
ரேகி என்றபிரபஞ்ச காஸ்மிக சக்தியைக் கொண்டு மனம், உடல், உள்ளம் உளைச்சலை நீக்கிபழைய நிலைக்கு கொண்டு வர முடியும். அதோடு கூட இந்த ஸ்படிகங்களும், நவரத்தினக்கற்களும் சேர்ந்து பண்ணினால் அளவிடமுடியாத சக்தி வந்து விடுகிறது . நவரத்தினக் கல்லின் ஒளி நிறைந்த சக்தியில் கிடைக்கக் கூடிய அதிர்வுகளும்இருக்கின்றன. இவையெல்லாம் நம்முடைய சக்தி மயமான சக்கரங்களுக்கு உள்ளேபோய் தூங்கி கிடக்கும் சக்கரங்களை தட்டி எழுப்பி மீண்டும் நல்ல நிலைக்குகொண்டு வருகின்றது. ஆகவே இந்த நவரத்தினக் கற்களும், ரேகியும் சேர்ந்துபண்ணும் முறையில் ஒரு இயற்கையான தீர்வு காண முடிகின்றது. பூமிமாதாவுக்குள் எடுக்கப்பட்ட இந்த விலை மதிக்க முடியாத கற்களில் தான்பூமியின் சக்தி நிரம்பி உள்ளது. நீங்கள் அதை உபயோகப்படுத்தினால்உங்களுக்கும், உங்களைச் சுற்றியுள்ளஉலகத்திற்கும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
உங்கள் வாழ்க்கையிலே இன்பமும், ஆனந்தமும், அமைதியும் உண்டாகும். ஸ்படிகத்துடன் ரேகி இணைத்து செய்வது மிகமுக்கியமான ஒரு படி எடுத்து வைப்பது போல் " Giant Step ”என்றுசொல்லுவார்கள். நான் முதலில் ஒரு சாதாரண குவார்ட்ஸ் கல்லை உபயோகப்படுத்தி, இருதய சக்கரத்தில் வைத்து பார்த்தேன். ஒரு விரிவான சக்தியே இருதயசக்கரத்தில் உண்டானது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. அதற்கு பிறகு ஐந்துநிமிடம் பூச்சி பறப்பது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. பிறகு மனம் மிகவும்அமைதியாகிவிட்டது. இது எனக்கு முதல் அனுபவம். என்னால் நம்ப முடியவில்லை.இவ்வளவு சக்தி இயற்கையிலேயே. கற்களுக்கு கிடைக்குமா என்று.
பிறகு ஆஞ்ஞாசக்கரத்தில் வைத்துப் பார்த்தேன். அங்கேயும் விரிவான சக்தி ஏற்பட்டதுபோன்ற அதிர்வுகளை உணர்ந்தேன். ஆகவேதான் இதை உபயோகப்படுத்தினால் வெகுவிரைவில் அந்த சக்தியின் முடிச்சுகளை அவிழ்த்து விட்டு சக்தியின் ஓட்டத்தைசீர்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கை வந்தது. இரண்டாம் நிலை கற்றுக் கொண்டபிறகு அந்த சின்னங்களை உபயோகித்து அந்த ஸ்படிகக் கல்லிலோ, நவரத்தினக்கல்லிலோ, ரேகி மாலையிலோ , ஸ்படிக மாலையிலோ ரேகி பண்ணினால் மிகவும் நன்றாகஇருக்கும். ஏனென்றால் ஒரு ஸ்படிக மாலையையோ அல்லது ஒரு டாலர் மாதிரிஉங்களுக்கு பிடித்தமான தகுந்த நிறத்தில் போட்டுக் கொண்டீர்களானால் அது 24 மணி நேரமும் நல்ல சக்தியை ஈர்த்து உங்களுடைய உடம்பில் உள்ள கெட்ட சக்திகளைவெளிக்கொண்டு வந்த உங்களை சாந்த நிலைக்கு கொண்டு சேர்த்து விடும்.
இந்தபிரபஞ்சத்தில் உள்ள பிரகாசமான
கதிர் வீச்சு சக்திதான் அந்த நவரத்தினக்கற்களிலும் மறைந்து இருக்கின்றது. அந்த
அற்புத சக்தி உங்களுக்குள் இயற்கைசிகிச்சை அளிக்கின்றது. இயற்கை முறையில்
திசுக்களை தூண்டி விட்டு உங்களைஇறைத் தன்மையை அடைவதற்கு மிகவும் உதவியாக
இருக்கின்றது. ஆகவே இந்த ரேகியைஇயற்கை கற்களோடு சேர்த்து பண்ணினால் ஒரு ஆச்சரியமான, இன்பமான அனுபவங்களைதரும்.