"பெர்சனல்"சீ "எனர்ஜி"(PERSONAL CHI ENERGY)
எப்பொழுதுமே, மகிழ்ச்சி திளைப்பு, சுறுசுறுப்பு, விவேகமான நல்லவார்த்தைகள், பார்த்தாலே நம்பிக்கைத் தரும்உருவம், எல்லாவற்றிற்கும் மேலாக அன்பின் அரவணைப்பு, இப்படிப்பட்ட மனிதரைபார்த்துண்டா? ! நீங்கள்!!
இப்படிப்பட்ட நபரை சீன பெங்சுயி சாஸ்திரம் "பெர்சனல் 8எனர்ஜி " (PERSONAL CHI ENERGY)உடைய நபர் என்று வர்ணிக்கிறது. தனிப்பட்ட நபரின் சக்தி என்பதே இதன் பொருள். சில பேரை பார்த்தாலேநமக்கு உற்சாகம் பிறக்கிறது. சில பேரை பார்த்தாலே கஷ்டம் தான் வருகிறது.இதற்கு காரணம் அந்த தனி நபரின் சக்தியே.
ஒரு வயது குழந்தையை பாருங்கள்.துறு துறு வென்று ஓடியே, சிரித்து விளையாடும். காலையில் படுக்கையை விட்டுஎழுந்தவுடன் அந்த குழந்தையின் ஆற்றல் சொல்ல வொண்ணாதது. நாமோ படுக்கையைவிட்டு எழுந்தவுடன் ஆயிரக்கணக்கான நினைவுத் தடைகளால் உற்சாகமின்றிஎழுகின்றோம். மனிதன் தெய்வீகத்தன்மை படைத்தவன்,
" அஹம் ப்ரும்மாஸ்மி, தத்துவமஸி "
" ப்ரக்ஞானம் , ப்ரும்மா "
" அயம் ஆத்ம, ப்ரும்மா: "
என்றநான்கு மகா வேத வாக்யமும், வேதங்களின் சாரங்களாகும். இவற்றை
சொன்னாலே தனிமனிதன் சக்தி (Personal chi Engergy)அதிகரிக்கும். நம்மால் முடியும்.நாம் தெய்வத்தின் மறு
பதிப்பு என்று நினைத்தாலே நம்முள் சக்தி பிறக்கும்.அது அணுசக்தியை விட மகத்தானது.
நம்முடன் பழகுவோருக்கும் இதுதொற்றிக்கொள்ளும்.