சிலர் வாஸ்துபடி கட்டிய வீடுகளில் வாழாவிட்டாலும் கூட நல்ல முறையில் வாழ்கிறார்கள் ஒரு வீடு மனிதனின் வாழ்வை நல்லதாகவோ கெட்டதாகவோ பாதிக்குமென்றால் இவர்கள் எப்படி சந்தோசமாக வாழ முடிகிறது?
உலகம் முழுவதும் நல்ல அதிர்வுகளும் கெட்ட அதிர்வுகளும் சமமாக பரவி உள்ளது இந்த அதிர்வுகளை நாம் நேரடியாக உணராவிட்டாலும் கூட அந்த அதிர்வுகள் இருப்பது சர்வ நிச்சயம் சில நேரங்களில் மனிதனால் அதை உணரவும் முடிகிறது. அப்படி உணர்ந்ததை வெளியில் நிரூபிக்க அவன் மனசாட்சியை தவிர வேறு ஆதாரங்கள் இல்லை என்பதனால் அவைகள் வெறும் நம்பிக்கைகளாகவே இருந்து வருகிறது.
வீடுகள் என்பது பரந்த உலகத்தின் சிறிய வடிவம் உலகெங்கும் பரந்துள்ள அதிர்வலைகள் வீடுகளுக்குள்ளும் நிரம்பி இருக்கும் அதில் நல்ல அதிர்வுகளை மட்டுமே தக்க வைத்து கொள்ள உதவி செய்வது வாஸ்து சாஸ்திரம் எனலாம். நன்றாக படிக்கும் ஆர்வமுள்ள மாணவர்களிடத்தில் ஒரு மக்கு மாணவன் வந்து சேர்ந்து விட்டால் அவனும் ஓரளவு படிக்க துவங்கி விடுவான் என்பது போல ஜாதகப்படி மிக கெட்ட பலனையே அனுபவிக்கும் ஒருவன் சரியான வாஸ்து முறையில் கட்டப்பட்ட வீட்டில் குடியிருந்தால் கண்டிப்பாக படிப்படியான முன்னேற்றத்தை அடைந்தே தீர்வான்.
அதே போலவே நல்ல ஜாதக அமைப்பு இருக்கும் ஒருவன் வாஸ்து சாஸ்திர விரோதமாக கட்ட பட்ட வீடுகளில் வாழ்ந்தால் நிச்சயம் பாதிப்படைவான். அதாவது ஜாதக கிரகங்கள் அவனுக்கு நூறு பங்கு நன்மை செய்வதாக இருந்தால் அவன் சரியான வீட்டில் வாழா விட்டால் இருபது பங்கு நன்மை மட்டுமே பெற முடியும். தான் இழந்தது எண்பது பங்கு நன்மையை என்று அறியாத அவன் இருபது பங்கு நன்மையே தனக்கு விதிக்க பட்டது என்று தவறுதலாக நினைத்து திருப்தி அடைகிறான்.
அதனால் வாஸ்து தோஷம் இருக்கும் வீடுகளில் வாழ்பவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்பது தவறு அவர்கள் இன்னும் அதிகபடியாக நன்றாக இருக்க வேண்டும் அதை அந்த வீடு தடுத்து கொண்டு நிற்கிறது என்பதே உண்மையாகும். அதே நேரம் ஒருவனுக்கு கெடுதலான கிரக பலன் நடக்கும் போது அவன் சரியான வீட்டில் வாழ்ந்தால் குறைவான துயரங்களே ஏற்படும் என்பது நிதர்சன உண்மையாகும்.
- தமிழ் நியூஸ்
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- _இந்துக்கள்
- _இஸ்லாம்
- _கிறிஸ்துவம்
- _சித்தர்
- _மந்திரங்கள்
- _ஜோதிடம்
- _எண் கணிதம்
- _கோவில்கள்
- பெண்கள் உலகம்
- _கர்ப்ப காலம்
- _பெண்கள் பாதுகாப்பு
- _பெண்கள் மருத்துவம்
- _சமையல் குறிப்பு
- _குழந்தை பாதுகாப்பு
- _வீட்டுப் பராமரிப்பு
- _தோட்டப் பராமரிப்பு
- _செல்லப் பிராணிகள்
- பயமறியான்
- _ஆரோக்கியம்
- _மருத்துவம்
- _வாழ்வியல் முறை
- _இரத்தினக்கல்
- _பைனான்ஸ்
- _வரலாறு
No results found