No results found

    தெற்கு பார்த்து வீடு கட்டலாமா...?

    காலம் மிகவும் கெட்டு போய்விட்டது மனுஷாள் மனது மாறிவிட்டது. என்று சொல்பவர்களை பழைய பஞ்சாங்கம் என்று கேலி செய்வது மிகவும் வாடிக்கையாகி விட்டது. என்னவோ இப்போது தான் காலம் கெட்டு போயிட்சா வள்ளுவர் காலத்திலேயே அடுத்தவன் பெண்டாட்டியை மோகிப்பவன் இருந்ததனால் தானே அவர் பிறன்மனை நோக்காமை என்று பாடினார் கள்ளுக்கடைக்கு போகிறவன் அந்த காலத்தில் இருக்க போய்தானே கள்ளுண்ணாமையை பற்றி வள்ளுவர் பாடவேண்டிய நிலைக்கு போனார் எனவே அப்போதும் இப்படி தான் இருந்தது இப்போதும் அப்படி தான் இருக்கிறது. என்று பலர் வியாக்கியானம் செய்கிறார்கள்.

    இந்த வியாக்யானத்தை கேட்கும் போது அடடே ஆமாம் சரியாகத்தானே சொல்கிறார்கள் என்று நமக்கு தோன்றுகிறது. ஆனால் கொஞ்சம் புத்தியை ஆழமாக செலுத்தி சிந்தித்து பார்த்தால் உண்மை தெளிவாக தெரியும் பழையகாலத்தில் கள்குடிப்பவன் மது அருந்துபவன் அவமான சின்னமாக பார்க்க பட்டான் இன்று மனிதனின் அந்தஸ்தை மது தீர்மானிக்கிறது. என்பது வேதனையான உண்மை பள்ளிக்கூடம் போகும் மீசை முளைக்காத பையன்கள் கூட கால்சட்டை பையில் பீர்பாட்டிலை சொருகிகொண்டு போகும் துர்பாக்ய நிலை அன்றைய சமூகத்திற்கு இல்லை அதனால் தான் கெட்டு போகும் மனிதகுலத்தை பற்றி உண்மையான அக்கறை உள்ளவர்கள் காலம் கெட்டு போய்விட்டது. என்று புலம்புகிறார்கள்.

    காலம் தான்கெட்டு போனதோடு மட்டுமல்லாமல் சில நல்ல பழகக்க வழக்கங்களையும் கெடுத்துவிட்டது இல்லாமலையே செய்து விட்டது. அந்த காலத்தில் வீடு கட்டுபவர்கள் மற்றவர்களின் பார்வை படாமல் இருக்க தென்னங்கீற்று வைத்து மறைப்பு கட்டி விட்டு தான் வீட்டு வேலையை துவங்குவார்கள் இன்று கீற்று விற்கும் விலைக்கு அது எதற்கு தெண்ட செலவு என்று பலர் அதை கடைபிடிப்பதே இல்லை கீற்று ஏன் கட்டுகிறோம் என்று யோசித்து பார்க்க வேண்டும். வீடு கட்டுவது நாம் நாளை அதில் வாழபோவதும் நாம் நமக்கு எப்படி கட்டினால் நன்றாக இருக்குமோ அப்படி கட்டினால் தான் வாழ்நாள் முழுவதும் மனதிருப்தியோடும் சந்தோசத்தோடும் வாழமுடியும்.

    அதை விட்டு விட்டு எங்கள் ராமசாமி மாமா சொன்னார் கோதண்டாராம சித்தப்பா சொன்னார் என்று நாம் போட்ட கணக்கை நாம் மனதிற்குள் ரசனையோடு வைத்திருக்கும் கற்பனை சித்திரத்தை தொலைத்துவிட கூடாது அதற்காக பிறரின் ஆலோசனையே வேண்டாம் என்று நான் சொல்லவரவில்லை முதலில் நீங்கள் ஆலோசனை கேட்பவருக்கு சம்மந்தப்பட்ட துறையில் ஞானம் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் அடிப்படை அறிவாவது இருக்க வேண்டும். சினிமா எடுபவனிடம் போய் சீன நாட்டுக்கும் நமக்கும் உள்ள எல்லை தகராறை பற்றிய விபரம் கேட்க கூடாது. அப்படி கேட்பவர்களை புத்திசாலி என்று சொல்பவனுக்கே புத்தி இல்லை என்று அர்த்தமாகி விடும்.

    தெற்கு பார்த்த வாசல் வைத்து வீடு கட்ட கூடாது என்று எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை உத்தமம் மத்திமம் என்ற கணக்குப்படி பார்த்தால் கிழக்கு வாசல் உத்தமம் தெற்கு வாசல் மத்திமம் என்று சொல்லலாம் அதுவும் கூட வீட்டு சொந்தகாரரின் ஜாதக அமைப்பிற்கு ஏற்றவாறு பலமாறுபாடுகள் உண்டு அவற்றை எல்லாம் நுணுக்கமாக ஆராய்ந்த பிறகே தெற்கு வாசல் சரியா தவறா தேவையா? இல்லையா? என்ற முடிவுக்கு வரவேண்டும். தெற்கே வாசலே வைக்க கூடாது என்றால் ஊரில் எந்த வீடுமே தெற்கு பார்த்து இல்லையா? அதில் வாழ்பவர்கள் யாருமே நன்றாக இல்லையா? என்பதை யோசிக்க வேண்டும்.

    பொதுவாக வாஸ்து சாஸ்திரம் நீ வடக்கே பார்த்து வீடு கட்டினாலும் தெற்கே பார்த்து கட்டினாலும் சதுரமான மனையில் எட்டு மூலைகளும் சரியாக இருக்க வேண்டும். அந்தந்த மூலையில் வைக்க வேண்டியதை வைக்க வேண்டும். உதாரணமாக ஈசான்யத்திலோ நிருதியிலோ கழிவறை வைக்க கூடாது வாய்வு மூலையில் தான் வைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. இதை மாற்றி செய்தால் நிச்சயம் பாதிப்பு உண்டு இதை நான் சாஸ்திரத்தை மட்டும் ஆதாரமாக வைத்து பேசவில்லை பலரின் வாழ்விலும் நடைபெற்ற சம்பவங்களை அனுபவமாக வைத்து பேசுகிறேன் எனவே பக்கத்தில் உள்ள நல்ல வாஸ்து சாஸ்திரம் படித்தவர்களை வைத்து பிளான் போட்டு நல்லபடியாக வீட்டை கட்டி நலமோடு வாழுங்கள் உலகம் முழுவதையும் வாழவைக்கும் நாராயணன் உங்களையும் வாழவைப்பான்.

    Previous Next

    نموذج الاتصال