
வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பொதுவாக குழம்புகின்ற ஒரு விஷயம் இருக்கிறது வீடு கட்டும் போது தலைவாசல் எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும் இருக்க கூடாது என்பது பற்றியெல்லாம் பரவலாக பேசப்படுகிறது ஒரு மனிதனுக்கு வீடுகட்டுதல் என்பது எவ்வளவு அவசியமோ அவ்வளவு முக்கியம் தொழில் துவங்குவது தொழில் துவங்கும் போது அது நடை பெறுகின்ற இடம் அல்லது கட்டிடம் எப்படி இருக்க வேண்டும் என்பதை பலர் விளக்குவதில்லை அத்தகைய விஷயங்கள் ஓரளவு தெரிந்தால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறார்கள்
உதாரணமாக சாதாரண கடைகள் எந்த திசையில் அமைந்தால் நன்றாக இருக்கும் என்று பலருக்கு தெரிவதில்லை ஆனால் வாஸ்து சாஸ்திரம் இதை பொறுத்த மட்டில் மிக தெளிவான பல கருத்துக்களை கூறியிருக்கின்றன ஆனால் அவைகளை வெளிப்படுத்தத்தான் பலரும் முன்வருவதில்லை அப்படியே முன்வந்து சொன்னாலும் அது சாதாரண மக்களுக்கு புரியாத வாஸ்து சாஸ்திர பரிபாஷயிலேயே சொல்லப்படுவதனால் அர்த்தம் பண்ணிக்கொள்வதில் கஷ்டம் இருக்கிறது என்கிறார்கள்
பொதுவாக வடக்கு மற்றும் கிழக்கு வாசலை கொண்ட கட்டிடங்களில் அனைத்து விதமான தொழில்களும் செழித்து வளர்கின்றன இதற்கு காரணம் மிக முக்கியமான தென்மேற்கு மூலை அடைபட்டு காற்று வராமல் தடுக்கப்பட்டு விடுகிறது தென்மேற்கு மூலை சரியாக அமைந்தாலே பல பிரச்சனைகள் வராது இதிலும் சில நுணுக்கங்கள் இருக்கின்றன அதாவது தலைவாசல் எந்த திசையில் அமைந்தால் என்ன தொழில் செய்யலாம் என்பது மிக முக்கியமான விஷயமாகும்
புத்தகக் கடை கல்வி உபகரண விற்பனை கடை ஜவுளிக் கடை பல்பொருள் அங்காடிகள் இரு சக்கர வாகன விற்பனை கடை போன்றவைகள் கிழக்கு முகமாக இருந்தால் நல்லது தொழில் ரீதியான (Professional shops) கடைகள் வடக்குமுகமாக இருப்பது நல்லது நகைக்கடை நறுமண பொருட்கள் விற்பனை செய்வது அலங்காரப்பொருட்கள் விற்பது இரும்பு கரி டயர் போன்ற கருவண்ண பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தெற்கு முகமாக இருக்கலாம்
விதைகள் தானியங்கள் தண்ணீர் குழாய்கள் விற்கும் கடைகள் வடக்கு முகமாக இருப்பது நல்லது உணவு விடுதிகள் தின்பண்ட கடைகள் மின்சாதனங்கள் எரி பொருட்கள் விற்பனை செய்யும் இடம் தென்கிழக்கு நோக்கி இருந்தால் நல்லது வடகிழக்கு உட்பட மற்ற மூலை திசைகளில் கடைகள் வைப்பது அவ்வளவு சிறப்புடையது அல்ல அதே போல் தெற்கு சுவரில் வடக்கு பார்த்த வண்ணம் சுவாமி படங்களை கடைகளில் வைக்க கூடாது வியாபார கூடங்களில் பயன்படுத்தும் நாற்காலி மேஜைகள் இரும்பாலோ பிளாஸ்டிக் பொருளாலோ ஆனதாக இருக்க கூடாது தேக்கு அல்லது வேங்கை மரத்தில் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவது தான் நல்லது
அதே போல முதலாளி அல்லது காசாளர் கிழக்கு அல்லது வடக்கு திசையை பார்த்து அமர வேண்டும் அவர்கள் கிழக்கு திசையில் அமர்ந்தால் பணப்பெட்டி வலது பக்கம் இருக்க வேண்டும் வடக்கு திசைபார்த்து அமர்ந்தால் பணப்பெட்டி இடப்பக்கம் இருக்க வேண்டும் தராசு தெற்கு மேற்கு சுவரை ஒட்டி இருக்க வேண்டும் தினசரி கடையை சுத்தப்படுத்தி காலை மாலை இருவேளையும் தூபதீபம் காட்ட வேண்டும் வாரத்தில் ஒருநாள் திருஷ்டி சுத்தி போடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்
மிக முக்கியமாக கல்லாபெட்டியில் ஸ்ரீ சக்கரம், ஸ்ரீ லஷ்மி சக்கரம்,தன ஆகர்ஷன சக்கரம்,குபேர சக்கரம் போன்றவைகளை முறைப்படி எழுதி மந்திர உரு ஏற்றி நெறி வழுவாமல் வைத்து பூஜிக்க வேண்டும் இப்படி நம்பிக்கையோடு செய்து வந்தால் நிச்சயம் வியாபாரம் நல்ல முறையில் நடப்பதை அனுபவத்தில் உணரலாம்.