No results found

    நினைத்தது நிறைவேற

    நினைத்தது நிறைவேற

    நள்ளிரவு நேரம்
    , டெலிபோன் மணி அடித்தது. தாக்கத்தில் எடுக்கலாமா ? வேண்டாமா என்ற சிந்தனை -ரிசீ வரை எடுத்த எனக்கு அதிர்ச்சி காத்திருக். ஜெம்மாலஜிஸ்ட்மீனாட்சி சுந்தர் இருக்கிறாரா?என்ற, பெண்ணின் குரல் கேட்டது. நான்தான் பேசுகிறேன்என்று உறுதிப்படுத்தியபோது அவரை குரல் மூலமாக அடையாளம்கண்டு கொண்டேன். பெரிய, மிகப் பெரிய தொழில் அதிபரின் மனைவியான அவர்மிகுந்த மனவேதனையும், மன உளைச்சலும் அடைந்திருப்பதாகவும் இன்னும் பத்துநிமிடத்தில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறினார். நான் பேசவாயெடுத்தபோது, “ உங்களுடைய சாமர்த்தியமான பேச்சினால் என்னுடைய முடிவைமாற்றி விட முடியாது. இதுவரை எனக்கு நீங்கள் கொடுத்த அறிவுரைகளுக்காகநன்றி கூறவே இந்த தொலைபேசி அழைப்பு. நான் மிகவும் மதிக்கக்கூடிய ஒருநபருடன் கடைசியாக பேச வேண்டும் என்று நினைத்ததால் உங்களுடன் பேசினேன்.நன்றி ! வணக்கம்என்று முடித்தார். 

    நான் இருக்கும் இடத்தில் இருந்துஅவர் இருக்கும் இடத்தை அடைய சுமார் குறைந்தது அரை மணி நேரமாவது ஆகும்.அதற்குள் எது வேண்டுமானாலும் நடக்கலாம். என்ன செய்வது எப்படியும் இந்தப்பெண்மணியை தற்கொலையில் இருந்து தடுத்து தீர வேண்டும். வாழ்வை எதிர்த்துநின்று போராடி முன்னேறும் திறன் நம் அனைவருக்கும் உண்டு. ஆனால் சிலநேரங்களில் மனத்தடுமாற்றத்தில் எடுக்கப்படும் ஒரு கோழைத்தனமான முடி தற்கொலை. பிரச்சனையில் இருந்து தப்பிக்க எடுக்கும் தவறானமுடிவே இது. உளவியல் ரீதியான இந்த விளக்கங்களை தரும் தருணமும் அது அல்ல.எதிர் முனையில் இருப்பவர் அதை ஏற்றுக் கொள்ளும் நிலையிலும் இல்லை. என்னசெய்வது?

     நான் பேசினேன். மேடம் நீங்கள் தற்கொலை செய்வது என்றுமுடிவெடுத்தால் என்னால் தடுக்க முடியாது. ஆனால் என்னுடைய ஒரு கேள்விக்குமட்டும் பதில் கூறுங்கள். இந்த உலகில் வாழ முடியாத உங்களால் மறு உலகில்மட்டும் எப்படி நிம்மதியாக வாழ முடியுமா ?” அரவிந்தர் ஆசிரமத்தை சேர்ந்தஅன்னை தற்கொலை செய்து கொள்பவர்கள் ஆவி உலகிலும் அதே போன்ற பிரச்சனைகளைசந்திக்கின்றனர் என்று கூறியுள்ளார் என்று மட்டும் நான் கூறினேன். இந்தபெண்மணி அன்னையின் பக்தராவார்.

     ஒரு நிமிடத்திற்கு பதில் எதுவும் இல்லை.தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவிலும் அவர் குழம்பி விட்டார் என்றுதெரிந்தது. இந்த வாய்ப்பை நான் நன்றாக பயன்படுத்திக் கொண்டேன்.

     “ஐந்துநிமிடம் மட்டும் உங்களை நேரில் சந்திக்க அனுமதி தாருங்கள்பின்னர்நீங்கள் எந்த முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று கூறினேன்.

     தற்கொலைசெய்யுமளவுக்கு அவருக்கு என்ன பிரச்சனை என்று நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டாமா? அவரது கணவர் தனது மில்லை ரூ.24கோடிக்கு விற்க தீர்மானித்தார். இந்த பெண்மணியோ ரூ.24.5கோடிக்குதான் விற்க வேண்டும் என்கிறார், அரை கோடி ரூபாய் குறைவாக கணவர் விற்க போகிறார் என்பதுதான் ஐயா பிரச்னை!.

     பாராளும் ஜனாதிபதி முதல் ஊருக்கு வெளியே ஓட்டைக் குடிசையில் வாழும் ஏழை வரைஎல்லோர்க்கும் பிரச்சனைகள் இருக்கின்றன. எப்பொழுதுமே பிரச்னைகளை தள்ளிநின்றுபார்த்தால் அதற்கு தீர்வு கிடைக்கும் . பிரச்சனையை நாம் என்று அகந்தையுடன் ( Ego )நோக்கினால் அதன் விளைவு நமக்கே தீங்கை தரும்.இரவு ஒரு மணிக்குபுறப்பட்டு 1.30மணிக்கு வீட்டை அடைந்தேன். அதிகாலை 3.15வரை அவருடன்பேசினேன். தற்கொலை எண்ணத்திலிருந்து தப்பித்த அவர் இன்றும் என்னைப்பார்க்கம் பொழுதெல்லாம் நன்றி கூறுவார். மனிதனுடைய மனம் அற்புத ஆற்றல்படைத்தது. எப்படி வாழ்க்கையை பார்க்கின்றோமோ அப்படிதான் அது தீர்வையும்தரும். யத்பாவம் தத்பவதிஎன்று நமது சாத்திரங்கள் கூறுகின்றன. நாம்மாற்றம் பெரும். தினமும் நினைக்கும் வண்ணமே நம் வாழ்க்கை காலைஎழுந்திருக்கும் பொழுதே ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையை தீர்மானித்துவிடுகிறார்கள். இந்த நாள் இனிய நாள் என்று நினைத்தால் அது அனியநாளாகத்தான் இருக்கும். " எமிலி க்யூ என்ற அறிஞர் இதற்கான ஒருமந்திரத்தையும் தந்தார். Day by Day in every way I am getting better and betterஎன்பது தான் அந்த மந்திரம்.

     ஒவ்வொரு நாளும் வாழ்வில் எல்லாவிதத்திலும் நான் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறேன் என்பதுதான் அந்தமந்திரம். இதை தினமும் எழுந்தவுடன் காலையில் கூறினாலே நாம் வாழ்வில்முன்னேற்றம் ஏற்படும். சாதாரண வார்த்தைகள் தான் ஆனால் சக்தி மிகுந்தவைஎன்று அறிஞர்கள் இதைக் கூறுகின்றனர். உலகின் பல நாட்டு ஜனாதிபதிகள்அறிஞர்கள் விஞ்ஞானிகள் உட்பட பலர் காலையில் எழுந்தவுடன் உட்கார்ந்து இந்தமந்திரத்தை பலமுறை கூறுகின்றனர். நாமும் இதை தினமும் கூறி வாழ்வில்!எல்லா வளத்தையும் பெறுவோமாக.

    Previous Next

    نموذج الاتصال