செவ்வாய் தோஷமா? கவலை வேண்டாம்.
நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் ஜாதகத்தில் 12ராசிகளில் சரியான இடத்தில் இல்லையென்றால் அதை செவ்வாய் தோஷம் என்றும்அங்காரக தோஷம் என்றும் ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.செவ்வாய் தோஷத்தைகுறிப்பாக விவாக பொருத்தம் பார்க்கும் போது மட்டும் தான் பார்க்கின்றார்கள் . இதனால் எத்தனையோ பெண்களின் திருமண வாழ்க்கை தடைப்பட்டு போகின்றது.
செவ்வாய் தோஷம் என்பது ஜாதகத்தில் இலக்னத்தில் இருந்தோ , சந்திரன்இருக்குமிடத்திலிருந்தோ அல்லது சுக்ரன் இருக்குமிடத்திலிருந்தோ 2 , 4 , 7 , 8 , 12ஆகிய இடங்களில் செவ்வாய் இருப்பதாகும்.
ஆனால் சுபகிரகம்பார்த்தாலோ, குறிப்பிட்ட இராசிகளோ, குறிப்பிட்ட லக்னங்களிலோ செவ்வாய்இருக்குமிடத்தை பொறுத்து செவ்வாய் தோஷம் நிவர்த்தியடைகிறது. இவ்வாறாகஆயிரக்கணக்கான தோஷநிவர்த்திகள் செவ்வாய்க்கு இருக்கிறது. இது தெரியாமல் பலபெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
செவ்வாய் தோஷத்தை நிவர்த்திசெய்யும் காரணங்களைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
ஒருவருக்குசெவ்வாய் தோஷம் இருந்தால் என்ன ஆகும்? செவ்வாய் ரத்தத்திற்கு அதி தேவதை, வீரியத்திற்கு அதி தேவதை.மாங்கல்யத்திற்கு அதி தேவதை. விபத்தினால்ஏற்படும்.
உடனடி மரணத்திற்கும் அதிதேவதை. ஒழுக்கத்திற்கும் காரகன் ஆவார். ஆகசெவ்வாய், ஜாதகத்தில் இருக்கும் இடத்தை பொறுத்தே தம்பதிகளின் வாழ்க்கையைபாதிக்கிறது. செவ்வாய் 2ம் இடத்தில் இருந்தால் குடும்பத்தை பாதிக்கும்.4ல் இருந்தால் ஒழுக்கத்தை பாதிக்கும்.7லும் 8லும் இருந்தால் மணவாழ்க்கையையும், ஆயுளையும் பாதிக்கும் 12ல் இருந்தால் அயனசயன போகத்தைபாதிக்கும். செவ்வாயை பொறுத்தே வாழ்க்கை அமைகிறது .
பெண்களுக்கு மாங்கல்யஸ்தானத்தில் செவ்வாய் இருந்தால் அது கணவனுடைய ஆயுளை பாதிக்கிறது. செவ்வாய்இருக்குமிடத்தை பொறுத்து கால் தோஷம், அரை தோஷம், முக்கால் தோஷம், முழுதோஷம் என்று கூறுவர். ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே இடத்தில் செவ்வாய்இருந்தால் அந்த தோஷம் நிவர்த்தியடைகின்றது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றது.
செவ்வாய் தோஷம் இருக்கக் கூடாது என்பது உண்மை. ஆனால் பல விதங்களில் தோஷம்நீங்கி விடுகிறது என்பதை அறியாத சில ஜோதிடர்களால் பலரின் வாழ்க்கைவீணாகிறது. செவ்வாய்க்கு ப்ரீதியான பவளம் அணிந்து கொள்வது நல்லது.அங்காருகனுக்கு தோஷ நிவர்த்தியான ஸ்தலம் என்று சொல்லப்படும் செவ்வாய்ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வருவது செவ்வாய் தோஷத்தைப்போக்கும் செவ்வாய் தோஷம் காரணமாக புத்ர பாக்கியம் இல்லாதவர்கள் இராமேஸ்வரம்சென்று அங்கு அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் கடலில் நீராடினால்தோஷம் நீங்கி விடும் . ஜாதக ரீதியில் செவ்வாய் தோஷம் நீங்கும் விதங்களைபின்வரும் பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.
லக்னம், சந்திரன், சுக்ரன் ஆகியவைகளுக்கு 2 , 4 , 7 , 8 , 12ஆ இடங்களில்செவ்வாய் இருந்தால் தோஷ ஜாதகமாகக் கொள்ள வேண்டும். மற்ற பாபக் கிரகங்கள்இருந்தாலும் இப்படியே.
செவ்வாய், மேஷம், விருச்சிகம், மகரத்திலிருகோஷமில்லை. சூரியன், குரு, சனி, ஆகியவர்களுடன் சோங்கோ அல்லது பார்க்கப்பட்டிருந்தாலோ தோஷமாகாது. இந்த செவ்வாம் தோஷம் தம்பதிகளில் ஒருவருக்குஇருந்து மற்றொருவருக்கு இல்லாமல் இருந்தால் தோஷமாகும். ஆகவே, இப்படிஇருப்பவர்களுக்கு விவாஹம் செய்யக் கூடாது. இவை சாதாரண பொது விதி. ஆனால்தேவகேரளம் முதலிய சாஸ்திர கிரந்தங்களில் செவ்வாய் தோஷ பரிகாரமாக பலகாரணங்கள் கூறப்பட்டுள்ளன. அந்த பரிகாரமும் இல்லாவிட்டால் தான் ஜாதகங்களைஒதுக்க வேண்டும்.
1 .கடக லக்னம் , சிம்ம லக்னம் என்ற இந்த இரண்டுலக்னங்களிலும் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் அங்காரக தோஷம்இல்லை. செவ்வாய் இருக்கும்.
2 - மிடம் மிதுனம் அல்லது கன்னியாகில்தோஷமில்லை.
3 .செவ்வாய் இருக்கும் 4 - மிடம் மேஷம், விருச்சிகமாகில்தோஷமில்லை.
4 .செவ்வாய் இருக்கும் 7 - மிடம் கடகம் , மகரமாகில்தோஷமில்லை.
5 .செவ்வாய் இருக்கும் 8 - மிடம் தனுசு , மீனமாகில் தோஷமில்லை
6 .செவ்வாய் இருக்கும் 12 - மிடம் ரிஷபம் , துலாமாகில் தோஷமில்லை.
7 .சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
8 .குருவுடன்சேர்ந்தால் தோஷமில்லை.
9 .சந்திரனுடன் சேர்ந்தால் தோஷமில்லை.
10 .புதனுடன் சேர்ந்தாலும் , புதன் பார்த்தாலும் தோஷமில்லை.
11 .சூரியனுடன்சேர்ந்தாலும் , சூரியன் பார்த்தாலும் தோஷமில்லை.
12 .செவ்வாய் இருக்கும்ராசியில் அதிபதி லக்னத்திற்கு1 , 4 , 5 , 7 , 19 , 10இவைகளில் எங்குஇருந்தாலும் தோஷமில்லை.
13 .8 , 12லுள்ள செவ்வாய் இருக்கும் ராசி மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரமாகில் தோஷமில்லை.
14 .தனது உச்ச வீடானமகரத்திலாவது, சொந்த வீடான மேஷ விருச்சிக ராசிகளிலாவது செவ்வாய் இருந்தால்தோஷமில்லை
15 .சனி, ராகு, கேது இவர்களுடன் கூடியாவது இவர்களால்பார்க்கப்பட்டாவது செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
16 .செவ்வாய் தன்மித்திரர்களான சூரியன், சந்திரன், குரு இவர்கள் வீட்டில் - அதாவதுசிம்மம், கடகம், தனுசு, மீனம் இந்த ராசிகளில் எங்காவது செவ்வாயிருந்தால்தோஷமில்லை.
குதூகலமே சுவர்க்கம்
உங்களுக்கு வயதாகி விட்டது என்றோ, வியாதி பிடித்துள்ளது என்றோ, அல்லதுநீங்கள் பலவீனமாகி விட்டதாகவோ, தளர்ச்சி வந்து விட்டதாகவோ எண்ணும் மருட்சியை விட்டு விடுங்கள், சில மனிதர்கள் வருடங்களை எண்ணி, முதுமைவருவதை நினைத்து, வருத்தி, இறப்பை எண்ணி, பயங்கொள்ளிகள்ளாக நடுங்குவர். குதூகலம் தான் சுவர்க்கம்; மனச்சோர்வு தான் நரகம் என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள், எப்போதும் செய்வதற்கு ஒரு வேலையை வைத்திருங்கள். அதை மிக நன்றாக செய்து அதில் மகிழ்வு பெறுங்கள்.
- சத்திய வாக்கு – பாபா