No results found

    Vesuvianite - வெசுவியானைட்

    வெசுவியானைட்

    கவர்ச்சிக்கு ஒரு காந்தக்கல்

    நடிகைகளின் உயிர்
    ? இளம்பெண்களின் கட்டாயம்! பார்த்தாலே பரவசம் ஊற்றும் தோற்றம்?! பார்க்கபார்க்க சுண்டி இழுக்கும் காந்தக்கண்கள். இப்படி எல்லாம் பெண்களை மாற்றஒரு ரத்தினக்கல் உண்டு. அதன் பெயர்தான் "வெசுவியானைட். சுமார் 1500ஆண்டுகளுக்கு முன்பு "கருடக்கீர்த்தி மணி" என இது அழைக்கப்பட்டது .

    யாருக்கு தான் அழகாக இருக்க வேண்டும் என்று ஆசை இல்லை. மந்திரசாஸ்த்திரத்தில் சில மந்திரங்கள் மற்றவரை தூண்டி இழுக்கும் திறன் படைத்தவை.இந்த மந்திரங்களுக்கு "அனங்க வித்யாஎன்று பெயர். மன்மத பிரயோகம்என்று கூறுவார்கள். இதே போல் சில ரத்தினக் கற்களுக்கும் வசிய சக்தி உண்டு.மோகன பார்வை, காந்தம் போல் கவர்ந்து இழுக்கும் அழகு, இளமை துள்ளல், இனிமையின் விளையாட்டு என இக்கற்கள் அணிபவர்கள் மாறி விடுவார்கள்.

    டர்காய்ஸ், பெரிடாட், ஸ்கோபோலைட், ரோஸ் குவார்ட்டர்ஸ், வெசுவியானைட்வைரம் போன்ற சுக்ர கிரக ஆதிக்கத்தில் வரும் ரத்தின கற்களுக்கு வசிய சக்திஉண்டு. இந்தக் கற்களை அணிபவர்களின் சொல்லுக்கு மற்றவர்கள்கட்டுப்படுவார்கள். இந்த கற்களை அணிந்து இருப்பவரின் நட்பு கிடைக்காதாஎன்று வியக்க வைக்கும் அளவுக்கு மோகன சக்தி படைத்தவை. இவை

    தேவலோகபெண்களில் கந்தர்வ பெண்கள் அப்சரஸ் நாக கன்னிகள் போன்ற பல வகை உண்டு.கந்தர்வ பெண்கள், அப்சரஸ்கள் போன்றவர்களை ஒரு முறை பார்த்தாலே மனம்அவர்களை நாடிச் செல்லும்!. இன்று பல பெண்களுக்கு இந்த மோகன சக்தி உண்டு.இதை போன்று நாககன்னிகள் இன்பத்தை அளிப்பதில்வல்லவர்கள்.இதை போன்ற சக்தி படைத்தவர்கள் பெண்களும் இன்று உண்டு. இது போல் வௌவியானெட்கற்களை அணிபவர்களுக்கு அந்த மோகன சக்தி ஏற்படுகின்றன. அழகுப் பெண்கள்அல்லது மோகன ஆண்களின் நட்பு ஏற்படும்.

    வெசுவியானெட் கற்கள் அணிபவர்கள்எவ்வளவு சாதாரணமாக இருந்தாலும் அழகு அற்றவர்களாக இருந்தாலும், தாங்கள்நினைத்த செயலை செய்யும் ஆற்றல் படைத்தவர்கள் ஆகின்றனர்.

    பண்டையபுராணங்களில் வெசுவியானைட் கல்லுக்கு கருடகீர்த்தி மணி என்று பெயர்.பாட்டில் பச்சை, ஆலிவ் பச்சை அல்லது மிலிட்டரி பச்சை என்று அழைக்கப்படும்.நிறத்திலுள்ள இந்த கல், அணிபவர்களுக்கு "கீர்த்தியை" - புகழைத் தரும்என்று வருணிக்கப்படுகின்றன.

    வெற்றி + செல்வம் = கீர்த்தி

    இதுதான் பார்முலா .

    அணிபவர்களுக்கு வெற்றியையும், செல்வத்தையும் ஒரே நேரத்தில் தர வல்லது.

    ஸோரோ சிலிகேட் என அழைக்கப்படும் தாது உப்பு வகையை சேர்ந்தது வெசுவியானைட், கால்சியம், அலுமினியம், மக்னீசியம், பெர்ரஸ், கொரிமியம் போன்ற தாதுஉப்புகள் அடங்கிய வெசுவியானைட்க்கு ஐடோகிரேஸ் என்ற பெயர் உண்டு.

    புதிதாக திருமணம் ஆனவர்கள், புதிதாக வியாபாரம் தொடங்குபவர் நீடித்த நட்புவேண்டும் என்பவர்கள். வெசுவியானைட் அணிவதன் மூலம் நல்ல பலனை பெறுவார்கள்.

    தனி நபரின் மனோபலத்தை தூண்டி, புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு வித்திடும்இந்த கல் அறிவு ஆற்றலை தூண்டிவிடும்.

    சிறைவாசம் போல் தனியாக இருக்கும்நபர்களுக்கு புதிய பாதையை காட்டும் இந்த கல், கோபம், மனச்சுமை போன்றவற்றைநீக்கும். சுக்ரன் ஆதிக்கத்தில் வரும் இந்த கல் அணிபவர்களுக்குராஜபோகத்தையும், புதிய வாழ்க்கையும் கொடுக்கும்.

    Previous Next

    نموذج الاتصال