"டைகர்ஸ் ஐ”
( TIGER ' S EYE )
டைகர்ஸ் ஐ எனப்படும் இந்த கல் துணிவைதரக்கூடியது. சூரியனின் ஆதிக்கத்தை படைத்தது. புத்தாண்டையும், புதுவாழ்வையும் குறிக்கக் கூடியது. மண்ணும், பொன்னும் ஓரேங்கே கலந்ததால் இதுஆக்க ரீதியான கலைகளை வளர்க்கக் கூடியது. எப்பொழுதுமே தயங்கத்துடன்செயல்படும் நபர்களுக்கு இது ஊக்கத்தை தரக்கூடியதாகும். புலன்களுக்குஅப்பாற்பட்ட சக்தியைத் தரும். இந்த இரத்தினக் கல் ஆக்ஞா சக்கரத்தைமூன்றாவது கண்ணை தூண்டி விடக்கூடியது.சூரிய சக்தியை பிரதிபலிக்கும்ஆற்றல் மிகுந்த இந்த இரத்தினக்கல் அணிந்து இருப்பவரை ஒரு ஊக்கமிகுசக்தியாகவே ஆக்குகின்றது. தன்னம்பிக்கை எப்பொழுதும் ஊக்கம் எதிர்காலம்பற்றிய ஒரு இனிமையான தவிப்பு போன்றவற்றைத் தரும் இந்த கல் மூளையின் இடதுபக்கத்தையும் , வலது பக்கத்தையும் , ( Left Brain , Right Brain )ஓரேங்கேசெயல்படுத்தும் தன்மையை படைத்தது. சீன வாஸ்துகலையான பெங்சுயில் யின் யாங்எனப்படும் சமநிலை சக்தியை ஏற்படுத்தக்கூடிய தன்மை படைத்ததால் வீட்டில்வைத்துக் கொள்ளலாம். வீட்டிற்கே பிராண சக்தியை தரக்கூடியது. ஒரு தனிமனிதனுக்கு அவனின் தேவை என்ன என்பதை அறிந்து உணர்ந்த கூடியது. கண் நோய், முதுகு வலி போன்றவற்றை நீக்கக்கூடியது.
வீட்டின் நடுவிலோ அல்லது பூஜைஅறையில் வைத்தால் வீடு முழுவதும் இது ஆக்கபூர்வ வெற்றி சக்தி நிறைந்துஇருக்கும். பண்டைய எகிப்திய மன்னர்களாலும், குருமார்களாலும் மதிக்கப்பட்டஇந்த கல் அவர்களுடைய மார்புகவசத்தை அலங்கரித்தது. எகிப்திய மன்னர்களும், குருமார்களும் தாங்கள் நடத்திய அற்புதங்களுக்கு, அதிசயங்களுக்கு இந்தஇரத்தின கல்லை உதாரணமாக காட்டுகின்றனர்.