No results found

    Crystal - ஸ்படிகங்கம்

    ஸ்படிகங்களுக்கு நினைவாற்றல் உண்டு !

    ஸ்படிகங்களுக்கு நினைவாற்றல் உண்டு!அவை நமக்கு பதில் கூட கூறுமாம்! சமீபத்தில் மிஸ்ஸி ஸிப்பி பல்கலைக்கழகத்தைசார்ந்த மாக் பிரிஸிலி
    , என்ற விஞ்ஞானி தலைமையில் ஒரு குழுஸ்படிகங்களையும், மற்ற வகை ரசாயன ஸ்படிக அமைப்புகளையும் ஆராய்ந்தனர்.அப்பொழுது ஸ்படிகத்திற்குள் ஓர் ஒலி அலையை அனுப்பினார்கள். சிறிதுஅமைதியான இடைவெளிக்குபின் அதே ஒலி அலை ஸ்படிகத்தில் எழுந்தது.

    ஓர்ஸ்படிகத்தை அழுத்தினால் அல்லது கையில் தேய்த்தால் அதில் மின் அதிர்வுகள்ஏற்படுகிறது. இதற்கு பீஸோ மின் விளைவுகள் என்று பெயர். இதனை கண்டுபிடித்த பிரெடரிக் பீஸோ. என்ற ஜெர்மன் நாட்டு விஞ்ஞானியின் பெயர், இந்தவிளைவுக்கு வைக்கப்பட்டது. இதே போல் ஸ்படிகத்தில் ஒலி புகும் பொழுது மின்அதிர்வுகள் மாறுகிறது.

    இன்றைய செயற்கை இழை, ஒளி, தொலை தொடர்பு ( Fibre OPtic Tele Communication )இது நன்கு பயன்படுகிறது. லிதியம் நியோபேட்என்ற வகை ஸ்படிகமும் இந்த வகை நினைவாற்றல் கொண்டதாக உள்ளது. என்று மாக்பிரேஸிலே தலைமையிலான குழு நிரூபித்துள்ளது.

    ஒலி அலையை திருப்பி அனுப்பும்ஸ்படிகத்தின் திறன் அதன் உருவ அளவு மற்றும் பல காரணிகளுக்கு ஏற்பமாறுபடுகிறது.

     வைர மோதிரத்தில் கீதையை பதிவு செய்த பீஷ்மர்!

    மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு கீதை! உபதேசம் செய்த பொழுதுஅதை கேட்ட பீஷ்மர், கீதை மறக்காமல்இருக்க தனது வைர மோதிரத்தில்அதை பதிவு செய்துக் கொண்டாராம்! வைரத்தில் எவ்வாறு ஒலி அலை பதிவுசெய்ய முடியும்? ! என்பது ஒரு கேள்வி.  அவசரத்திற்காக, தான் அணிந்திருந்த வைரமோதிரத்தில் முழு எவ்வாறு பீஷ்மரால் பதிவு செய்திருக்க முடியும் என்று மகாபாரதத்தை படித்த பொழுது நான் வியப்பும், திகைப்பும் அடைந்தேன். ஆனால் இன்று மிஸ்ஸி ஸிப்பி பல்கலைக்கழக விஞ்ஞானிக்குழு இதனை நிரூபித்திருக்கிறது.

    இந்த தகவல் தெரிந்தவுடன் எனது வீட்டில் இருந்த இரண்டடி நீளமுடைய, ஆறுபட்டைகளுடைய, ஸ்படிகத்தில் நானே ஒரு சோதனை மேற்கொண்டேன், டேப்ரிக்கார்டரில் விஷ்ணு. ஸஹஸ்ரநாமம் ஒளிக்க அதனுடைய அதிர்வுகளைஸ்படிகத்தி என்னால் கேட்க முடிந்தது. இது எனது மன கற்பனையா? அல்லதுஉண்மையா? என்று அறிய இரண்டடி நீளமுள்ள ஸ்படிகத்தை எடுத்துக் கொண்டு என்சகோதர் வீட்டுக்கு சென்றேன். அங்கு டேப் ரிக்கார்டரில் வேத மந்திரமானருத்ரத்தை ஒலிக்க அதன் அலை அதிர்வுகளை ஸ்படிகத்தில் கேட்க முடிந்தது.

    இரத்தினக்கல் அனைத்துமே இயல்பாகவே தெய்வீகத்தன்மை உடையது. மந்திரசக்தியைவாங்கி வைத்துக் கொள்ளும் திறன் படைத்து என்று பண்டைய நூல் கூறுகிறது. அதுஇன்று விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கும் பொழுது, மனதிற்கு மகிழ்ச்சியைதருகிறது .

    நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்

    நரகத்திலிடர்ப்படோம் நடலை இல்லோம்

    ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம்

    இன்பமே எந்நாளூம் துன்பமில்லை.– நமசிவாய

    Previous Next

    نموذج الاتصال