சந்திர காந்தக் கல்
தமிழ் நாட்டில் எளிதாக கிடைக்ககூடிய உபரத்தினங்களில்சந்திர காந்தக்கல்லைப் கல்லும் (Moonstone)ஒன்று இந்தக்சந்திரகாந்தக் கல்லைப்பற்றி ஆதிசங்கரர் மிகவும் உயர்வாக கூறுகின்றார்.லலிதா பரமேஸ்வரியை பற்றி வர்ணிக்கும் மந்திர சாஸ்திரமானஸௌந்தர்ய லஹரியில் ஆதிசங்கரர் பல இடங்களில் இந்தக் கல்லைப் பற்றி வர்ணித்துள்ளார் . வஸினி முதலான வாக் தேவதைகள் இந்த கல்லில்வசிப்பதாக அவர் கூறுகிறார்.!
இந்த சந்திர காந்தக் கல்லை அணிந்தாலே வாக்கு சக்தி பெருகும். அணிபவரின்நாக்கில் சரஸ்வதி குடியிருப்பாள். உதாரணமாக, இந்த சந்திரகாந்தக்கல்லைப் பற்றி சௌந்தர்யலஹரியில் கூறும்17வது லோகத்திற்கு ஸாரஸ்வதஸ் ப்ரோயகம் என்று பொருள்.
ஐஸ்வர்ய வ்ருத்தி, கார்யஸித்தி தரும் இந்த சந்திர காந்தக் கல் மன நலம் குன்றியவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இதனை அணிந்து வந்தாலே அவர்களுடைய அன்றாட வாழ்க்கை சிறப்பு மிக்கதாக ஆகும்.
ஸவித்ரீ பிர்வாசாம் சசிமணி சிலாபங்கருசிபி:
வசிந்யாத்யாபி: த்வாம் ஸஹஜநநி ஸஞ்சிந்தயதி ய:|
ஸ கர்தா காவ்யாநாம் பவதி மஹ்தாம் பங்கிரு சிபி:
வசோபி: வாக்தேவீவதன கமலாமோத மதுரை:|| 1711
இதன் பொருள் பின்வருமாறு :
ஹே ஜநநி : ஹே லோக மாதாவாகிய பராசக்தியே
வாசாம் : நவரஸங்களாலும் அலங்கரிக்கப்பட்ட வாக்விலாசங்களை
ஸவித்ரீபி : உண்டு பண்ணு கின்றவர்களாயும்
சசிமணி சிலாபங்கருசிபி : சந்தரகாந்தக் கல்லை பிளந்தால் அது எவ்விதமான வெண்மை நிறமுள்ளதாக காணப்படுமோ அதுபோல் மிகவும் சுந்தரமான மஹிமை, நிறம் இவைகளை உடைத்தானவர்களாயுமிருக்கின்றன.
வசிந்யாத்யாபி : வசினி முதலான எட்டுவிதமான சக்திகளோடு
ஸஹ : சேர்ந்து
த்வாம் : உன்னை
ய : எந்த உபாசகன்
ஸஞ்சிந்தயதி : உபாஸிக்கின்றானோ
ஸ :அந்த உபாஸ்கன்
மஹதாம் : காளிதாசன் முதலான - மஹா கவிகளுடைய
பங்கிருசிபி :வாக்கு சக்தி பெருகி
வாக்தேவீ வதன கமலா : ஸரஸ்வதியினுடைய தாமரை புஷ்பத்தைபோலோத்த முகத்திலுள்ள
மோத மதுரை : பரிமளத்தை உடையவனாகி
வசோபி : அழகான வாக்விலாசங்களால்
காவ்யாநாம் : அரும் பெரும் காவ்ய நாடக அலங்காரங்களை
கர்த்தா : செய்கிறவனாக
பவதி : ஆகிறான்