No results found

    Jade - ஜேடு

    விரைவில் நலம் பெற ஜேடு(JADE)

    ரத்தின கற்களில் சில வகை கற்கள் பணத்தைத்தரக்கூடிய சக்தியை பெற்றவை. மற்றும் சில வகை கற்கள் வசிய சக்தி படைத்தவை.மேலும் சில வகை கற்கள் உடல்நலத்தை பாதுகாத்து உடலுக்கு பிராண சக்தியைதரும் ஆற்றல் படைத்தவை. நோயற்ற வாழ்வையும்
    , உற்சாகத்தையும் தரக்கூடியரத்தின கற்களில் முதன்மையானது ஜேடு என்ற கல்லாகும். பச்சை நிறம் படைத்தது.

    பச்சை நிறத்தில் 32வகையான கற்கள் உள்ளன. மரகதம் முதல் ஆனிக்ஸ் வரை பலகற்கள் உள்ளன. சில வகையான பச்சை கற்கள் தேவதைகளையே ஆகர்ஷிக்கும் சக்திபடைத்தவை. ஜேடு என்றும் பச்சை கல் உள்ளே பாசி படர்ந்தது போல் காணப்படும்.இதில் பிராண சக்தி அதிகம் உடையது. இந்தக் கற்களை அணிபவர்கள் எப்பேர்பட்டகொடிய நோயிலிருந்து வெளியே வந்து விடுவார்கள். மரண பயம் இருக்காது.1981ம் ஆண்டு அப்பொழுது நான் ஜெம்மாலஜி படிக்கத் துவங்கிய காலம். கலர்கலர்களாக கற்களை பார்த்தவுடன் பிரமிப்பில் ஆழ்ந்து அப்படியே நின்று விடும்நேரம் அது. ஒரு நாள், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டுஅம்மனை தரிசித்து விட்டு மேற்கு கோபுர வாசல் வழியாக வெளியே வந்தேன். வலதுபுறத்தில் எதிர் வரிசையில் "நாகப்பட்டினம் நெய் மிட்டாய் அல்வா கடை"என்னை வா வா என்று வரவேற்றது. அப்பொழுது என் அருகே வந்த காஷ்மீர் இளைஞன்எதிரே உள்ள லாட்ஜில் ரத்தின கற்கள் கடை வந்திருப்பதாக கூறி என்னை வரும்படிஅழைத்தான். அவனுடன் சென்று நான் விதவிதமான கலர் கற்களை பார்த்தேன்.அப்பொழுது தான் நான் ஜெம்மாலஜியுடன் கைரேகை (Palmistry)கலையை கற்றுவந்தேன். தெருவில் செல்பவர்களை வலுகட்டாயமாக இழுத்துஅவர்கள் கைரேகையை பார்த்து பலன் கூறி, ஆனந்தப்பட்ட காலம் அது. அனுபவமும், அறிவும் ஒருங்கே கிடைத்த காலம். வெட்கப்படாமல் ஆர்வத்துடன் அழைத்த நேரம்.தெருவில் கீழே கற்கள் கிடந்தால் பொறுக்கி எடுத்து ஆராய்ந்த நேரம்.காஷ்மீர் இளைஞன் கையை பார்த்து சிறுநீரக கோளாறு உள்ளதா என்று கேட்டேன்.அந்த இளைஞனும் ஆம்என்று கூறி அன்று மாலையே ஸ்ரீநகர்செல்வதாகவும், கிட்னி ஆபரேஷன் நடக்கப்போவதாகவும் கூறினான். உயிருடன் இருப்பேனா என்றுகேட்கவும் செய்தான்.

    ஜேடு வைத்து கொண்டால் சிறுநீரக கோளாறு சீராகும்.அறுவை சிகிச்சை நடக்காது என்றேன் நான். பல விதமான ரத்தின கற்களைபார்த்தாலும் பணம் இல்லாததால் வாங்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறினேன்.இந்த சம்பவங்கள் நடந்து 6 , 7 மாதங்கள் உருண்டு ஓடி விட்டன. ஒரு நாள்மதுரை மீனாட்சி அன்னையை தரிசனம் செய்து விட்டு அதே மேற்கு கோபுர வாசல்வழியாக வெளியே வந்தேன். ஒரு இளைஞன் ஓடி வந்து என் கையை பிடித்து கொண்டான்.என்னை தெரிகிறதா? என்று கேட்டான்.

    "கிட்னி பிராப்ளம் - உயிருடன்இருப்பேனா?” என்று கேட்ட அதே இளைஞன். கையில் ஜேடு மோதிரமும், ஜேடுபிரேஸ்லெட்டும் பளபளத்தன. புன்னகைத்தவாரே அவனுடைய கடைக்கு சென்றேன். ஜேடுகல்லினால் தான் உயிர் பிழைத்தேன் என்று அவனுடைய அனுபவத்தைக் கூறினான். 6மாதங்களுக்கு முன் நான் அந்த இடத்தை விட்டு அகன்றவுடன் ஜேடு மோதிரம், ஜேடுபிரேஸ்லெட், ஜேடு மாலா என எல்லாவற்றையும் அணிந்து கொண்டதாகவும் அன்றேஸ்ரீநகர் புறப்பட்டு சென்றதாகவும், ஸ்ரீ நகரில் அவனை பரிசோதித்த டாக்டர்மூன்று முறை வர சொன்னதாகவும், 3வது முறை ஆபரேஷன் தேவையில்லை என்றும், சிறுநீரகம் நன்றாக வேலை செய்வதாகவும் கூறி மாத்திரைகள் கொடுத்தார்கள்.டாக்டர் இவ்வாறு கூறிய போது என்னை நினைத்து கொண்டதாக கூறினான். ஒரு கைநிறைய ஜேடுகற்களை எனது கையில் வைத்து நன்றி கூறினான். ஒரு சில கற்களை வாங்கிபழக்கப்பட்ட எனக்கு, திடீரென்று நிறைய கற்கள் கிடைத்த ஒரு இன்ப அதிர்ச்சி.எனக்கு அன்று மூன்று மடங்கு சந்தோஷம் இருந்தது.

     முதல் காரணம் நமது இந்தியஇரத்தின சாஸ்த்திரங்கள் ஜேடு பற்றிய கூறியவை உண்மை என்பது முதல் காரணம்.என்னால் அவன் கையை கணித்து கூற முடிந்தது இரண்டாவது காரணம். கை நிறைய ஜேடுகற்கள் கிடைத்தது மூன்றாவது காரணம். ஜேடு என்பது சர்வசக்தி படைத்த ஒருஅதிசய ரத்தின கல்லாகும். ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகள், சிறுநீரககோளாறுகள், இதய நோய்கள், பக்க வாதம், சொரியாசிஸ் போன்ற தோல் வியாதிகள்போன்றவற்றை நீங்க கூடிய வல்லமை படைத்தது ஜேடு கற்களாகும்.

    நீண்ட நாட்களாகஇருக்கும் வியாதிகளையும் குணப்படுத்தும் வல்லமைப் படைத்தது ஜேடு. 1981 - ல் ஜெம்மாலஜி கற்று கொண்டவுடன் எனது தந்தைக்கு நான் முதன் முதலாக கொடுத்தகல் ஜேடு ஆகும். நான்கு முறை அவருக்கு பக்கவாதம் (Paralytic Stroke )நோய் தாக்கியது. உன் தந்தையார் இனிமேல் பேசவே முடியாது. அவரால் நடக்கமுடியாது என்று டாக்டர்கள் கூறினார்கள். ஆனால் அடுத்த நாளே எனது தந்தைஎழுந்து பேச தொடங்கினார். எழுந்து நடக்க துவங்கினார். 98வயது வரைவாழ்ந்தார். சாவதற்கு 3நிமிடம் முன்பு வரை சிரித்து பேசிக் கொண்டுஇருந்தார். இதற்கெல்லாம் ஜேடு என்ற அதிசய அற்புத கல்லே காரணம். எனதுதாயாருக்கு ஜேடு கொடுத்தேன். அவர் 93வயது வரை உயிர் வாழ்ந்தார். 93 - வயதில் கண்கள் நன்றாகத் தெரிந்தன. காது. கூர்மையாக கேட்டது. பற்கள்அப்படியே இருந்தன. இதற்கு காரணம் ஜேடு ஆகும்.

    நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு. மனதில் பயம் இல்லாத தன்மை, அளவற்ற உற்சாகம் . எல்லாவற்றிற்கும் ஜேடு கல்லே காரணம். நரம்பு சம்பந்தமான கோளாறுகள், முதுகு வலி, கைகால் வலி இவற்றை போக்கும் சக்தி மொத்தமாக ஜேடு கல்லுக்குஉண்டு. இன்றும் சீனாவில் பிறந்த குழந்தைகளுக்கு நாக்கில் ஜேடு கல்லைதேனில் வைத்து தடவுவது வழக்கம். ஜேடை சீனர்கள் லி என்று அழைப்பதுவழக்கம். லி என்றால் புத்தர் என்று அர்த்தம். நோயற்ற வாழ்வுடன்விவேகத்தையும் அளிக்கின்றது. ஜேடு கல்லை மோதிரமாகவும், டாலராகவும், மாலையாகவும் அணியலாம். இவ்வாறு அணிந்த பின், வாரம் ஒரு முறை மோதிரத்தையோ, டாலரையோ, மாலையையோ, காய்ச்சாத பச்சை பாலில் வைக்க வேண்டும். இவ்வாறுசெய்வதால் அதில் உள்ள தோஷங்கள் நீங்கிவிடும். மேலும் இதை ஒவ்வொரு வாரமும்செய்ய வேண்டும்.

     

    “தெய்வத்தாள் ஆகாதெனினும் முயற்சி தயை

    மெய் வருத்தக் கூறிதரும்.

    Previous Next

    نموذج الاتصال