No results found

    பிரத்தியேக இந்திய கலை: இரத்தின கற்கள் பதித்த நகைகள்


    மனிதர்களின் தரத்தை உயர்த்துவது தங்க நகைகள் மற்றும் அதில் பதிக்கப்பட்ட விலை உயர்ந்த ரத்தினக் கற்கள் என்றால் மிகையாகாது. பழங்காலத்திலிருந்தே நகைகளை அழகுபடுத்த அவை பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் நிறம், பளபளப்பு, பட்டை தீட்டப்படும் பாணி மற்றும் கிடைப்பதற்கு அரிது போன்றவை மற்ற கனிம கற்களிலிருந்து அவற்றை வேறுபடுத்துவதோடு அவற்றின் மதிப்பை வரையறுக்கிறது. மேலும், அவற்றின் நோய் குணப்படுத்தும் ஆற்றலும் உலகம் அறிந்தது .

    இந்தியாவில் ரத்தின நகைகளின் வரலாறு. பிரமிக்க வைக்கும் வகையில் கையால் செதுக்கப்பட்டு செய்யப்பட்ட ரத்தின கல் நகைகளின் பல துண்டுகள் பண்டைய நாகரிகங்களின் எச்சங்களாக புதைபொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ரத்தின கல் நகைகள் அப்போதும் பிரபலமாக இருந்தன என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. மேலும், மகாபாரதம் மற்றும் ராமாயணம் போன்ற பல இந்திய நூல்கள், ரத்தினக் கற்களின் குணப்படுத்தும் ஆற்றலையும் , தங்களின் ஆற்றல் திறனை அதிகரிக்க ராஜாக்கள் மற்றும் ராணிகளால் எவ்வாறு அலங்கரிக்கப்பட்டன என்பதையும் ஆவணப்படுத்துகின்றன.

    மேலும், முகலாயர்களை இந்தியாவில் தங்கள் சாம்ராஜ்யத்தை அமைப்பதற்கு பெரிதும் கவர்ந்தது இந்தியாவின் செழுமையான ரத்தினக் கருவூலம் தான் என்று கூறப்படுகிறது. முகலாயர் காலத்தில், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உயர் ரக கற்கள் செய்யும் கைவினைத் தொழில்கள் செழித்தன. அரச குடும்பத்தின் அன்றாட உடைகளைப் அலங்கரிக்க, பல புதிய வடிவிலான ரத்தினங்கள் மற்றும் மாற்று ரத்தினங்கள் பதித்த சிறப்பான நகைகள் உருவாக்கப்பட்டன. ஆனாலும் விக்டோரியா பேரரசின் ஆதரவின் போதுதான் இந்தியா விலைமதிப்பற்ற ரத்தினங்கள் மற்றும் மாற்று ரத்தினங்கள் வர்த்தக மையமாக உருவானது; குறையற்ற அற்புதமான கற்கள் பதிக்கப்பட்ட-நகைகள் உருவாக்கப்பட்டன. இன்றும் இந்தியா உலகின் மிகச்சிறந்த ரத்தினக் கற்கள் பதித்த நகைகளை உற்பத்தி செய்கிறது.

    இந்தியாவில் இரத்தின நகைகளின் வெவ்வேறு வடிவங்கள். இந்திய நகை வடிவமைப்பாளர்கள் மற்றும் கைவினைஞர்களால் ரத்தினங்கள் பல்வேறு வகைகளில் நகைகளில் பாதிக்கப்பட்டது. இந்த கலையில் சில, 5000 ஆண்டுகள் பழமையானவை; 1. குந்தன் நகைகள்: இந்திய ரத்தின நகைகளில் இந்த குந்தன் நகை வடிவம் முகலாயர்களின் அரச ஆதரவின் கீழ் செழித்து வளர்ந்தது; இன்னமும் இது பாரம்பரிய திருமணங்களில் ஒரு அங்கமாக உள்ளது. இந்த கலை வடிவத்தில், ஒரு ரத்தினத்துக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொடுப்பதற்காகவும், பக்கத்தில் உள்ள ரத்தினங்களிலிருந்து தனிமைப்படுத்துவதற்காகவும் தூய தங்கப் படலத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரம், குந்தன் நகைகளுக்கு மிகவும் பிரபலமானது.

    நவீன தழுவல்: தெளிவான வண்ணங்களைக் கொண்ட கனிம பூச்சுகள் குந்தன் கலையில் பல மாறுபாடுகளைக் கொண்டு வந்துள்ளன. மேலும், வெள்ளியால் செய்யப்பட்ட குந்தன் நகைகள் ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பீகார் மாநிலங்களில் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன. 2. ஜடாவ் நகைகள்: ஜடாவ் நகைகள் "பொறிக்கப்பட்ட நகைகள்" என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இது திருமணம் அல்லது பண்டிகைகள் போன்ற மங்களகரமான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த தனித்துவமான கலைப்படைப்பு பல ரத்தினம், மாற்று ரத்தினம், விலையுயர்ந்த கற்கள், படிகங்கள் மற்றும் மணிகள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது, அவை திடமான தங்கத் தகட்டில் பதிக்கப்பட்டுள்ளன. இந்திய கைவினைஞர்களின் உள்நாட்டுத் திறன்கள் மேற்கிலும் இந்த வடிவத்தை மிகவும் பிரபலமாக்கியுள்ளன.

    நவீன தழுவல்: இப்போதெல்லாம், ஜடாவ் கலை முலாம் பூசுவதையும் இணைக்கப்பட்டு ஆபரணத்திற்கு தனித்துவமான வண்ணத்தை வழங்குகிறது. மேலும், அழகியல் மதிப்பை மேலும் கூட்ட பட்டை தீட்டப்படாத வைரம் ஒரு மையக் கல்லாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது. 3. லாக் நகைகள்: லாக் நகைகளின் (Lacquer) பல்வகை அழகு அதை உலகம் முழுவதும் பிரபலமாக்கியுள்ளது. இந்த கலை முன்பு ராஜஸ்தானி பழங்குடியினருக்கு மட்டுமே இருந்தது, ஆனால் இன்று இதன் சந்தை மிகப்பெரியது. டிமானியன், பாஜுபந்த் மற்றும் வளையல்கள் போன்ற லாக் ஆபரணங்கள் பல வடிவமைப்பாளர்களின் சேகரிப்பில் தவிர்க்க முடியாததாகும். நவீன தழுவல்: பழங்காலத்தில், லாக் ஆபரணங்களை அழகுபடுத்த கண்ணாடிகள் மற்றும் கண்ணாடி மணிகள் பழங்குடியினரால் பயன்படுத்தப்பட்டன, ஆனால் இப்போது ரத்தினங்கள் பதிக்கப்படுகின்றன. மேலும், இந்த வகையான நகைகள் ஒப்பீட்டளவில் மலிவு விலையில் இருப்பதால், இது இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. 4. நவரத்தின நகைகள்: அணிபவரின் நலனை உறுதிப்படுத்த, நவரத்தின நகைகளில், ஒன்பது மங்களகரமான கற்கள் ஒரே ஆபரணத்தில் பதிக்கப் படுகின்றன. இந்த ஒன்பது ரத்தினங்கள் மாணிக்கம், முத்து, வைரம், மரகதம், பவளம், பூனைகண், நீலம் , புஷ்பராகம் மற்றும் கார்னெட் ஆகும்; ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உள்ளது. உதாரணமாக, ரூபி தீய ஆவிகளை விரட்டுவதற்கு இணைக்கப்பட்டது; பவளம் நோய்களைக் குணப்படுத்துவதற்கும், கூர்மையான நினைவாற்றலுக்கும்; முத்து அமைதியைப் பேணுவதற்கும், புஷ்பராகம் அணிபவரின் நீண்ட ஆயுளுக்கும், மரகதம் ஏமாற்றுவதைத் தவிர்ப்பதற்கும் ஆகும். நவீன தழுவல்: பாரம்பரியமாக, நவரத்ன கற்கள் பெரும்பாலும் மோதிரங்கள் மற்றும் பதக்கங்களில் பயன்படுத்தப்பட்டது, ஆனால் இப்போது அவை காதணிகள், வளையல்கள், கவசங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல ஆபரணங்களை அழகுபடுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. இது பல்வேறு வண்ணங்களைக் கொண்டிருப்பதால் பல்வேறு இந்திய உடைகளுக்கு நன்றாக பொருந்தும். 5. பச்சிகம் நகைகள் இந்த பச்சிகம் நகை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் உருவானது, இன்றும் சமகால பேஷன் நகைகளின் இன்றியமையாத அங்கமாக உள்ளது. இது குந்தன் வேலையுடன் ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளது, ஆனால் ஒரு தெளிவற்ற மற்றும் உடையக்கூடிய தோற்றத்தைக் கொண்டுள்ளது. பொதுவாக பட்டை தீட்டப்படாத ரத்தின கற்கள் மற்றும் கண்ணாடி வேலைப்பாடுகள் பயன்படுத்தி பச்சிகம் நகைகள் செய்யப்படுகின்றன. பச்சிகம் நகையின் அழகு மற்றும் அதன் வசீகரம் யாரையும் அதன்பால் விழ வைக்க போதுமானது. நவீன தழுவல்: முன்பு தங்கம் மற்றும் பிளாட்டினம் ஆகியவை பச்சிகம் கலைப்படைப்புக்கு அடித்தளமாக பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இப்போது வெள்ளி பயன்படுத்துவதால் குறைந்த விலையில் கிடைக்க வழி செய்கிறது. 6. மணிகளால் ஆன நகைகள் மணிகளால் ஆன நகைகள், ஒரு காலத்தில் ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப் பகுதிகளில் மட்டுமே இருந்தது, ஆனால் இப்போது உலகின் அனைத்து பகுதிகளிலும் நன்கு அறியப்படுகிறது. பழைய நாட்களில், கல் பதித்த மணிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, பெரும்பாலும் தலை அணிகலன்கள், கணுக்கால்கள் மற்றும் கவசங்களாகப் பயன்படுத்தப்பட்டன. மேலும், கடினமான கனிம மணிகள் பயன்படுத்தப் பட்டு கழுத்தில் அணியும் நகைகள் மற்றும் பிற ஆபரணங்களை அழகுபடுத்த பயன்படுகிறது. நவீன தழுவல்: மணி மற்றும் கல் ஆபரணங்களின் தனித்துவமான நகைகள் இப்போது எளிதாகக் கிடைக்கிறது. இந்த நகைகளில், கற்கள் மையப் பகுதியில் பதிக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் ஆபரணத்தை அசாதாரணமாக்க மணிகள் சுற்றி அமைக்கப் பட்டுள்ளன. 7. சமகால கற்கள் பதித்த நகைகள்: இந்த வகையான நகைகள் பல வகை கலைகளை கலந்து ஒரு நவநாகரீக ஆபரணத்தை உருவாக்குவதாகும் . பொதுவாக, ரத்தினங்கள் மற்றும் மாற்று ரத்தினங்களை(ராசி கற்கள் அலாதவைகளை) வழக்கத்திற்கு மாறாக கலந்து ஒரு புதுப்பித்த நகையை உருவாதாக்கும். இன்று கற்களை அமைப்பதற்கான தளமாக ஸ்டெர்லிங் வெள்ளி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. விலை குறைவாக கிடைக்கச் செய்ய, அரிதாக, செம்பு மற்றும் பித்தளை கூட ஆபரணங்கள் செய்ய அடித்தள உலோகமாக பயன்படுத்தப்படுகிறது.

    Previous Next

    نموذج الاتصال