சிந்தாமணி ரத்தினம்
இயல்பாகவே ரத்தினக்கற்கள் தெய்வீகத் தன்மை வாய்ந்தவை. சில ரத்தினங்கள் நல்ல உடல் நலத்தைத் தரும். சில ரத்தினங்கள்செல்வத்தைச் சேர்க்கும். சில ரத்தினங்கள் வாழ்க்கையில் அல்லது தொழிலில் பெரும் வெற்றியைத் தரும்.மேலும் சில ரத்தினக் கற்கள் கவர்ச்சி, இன்பமான வாழ்க்கையைத் தரும். மற்றும் சில ரத்தின கற்கள் நல்ல மனைவியைஅல்லது கணவனை அதாவது நல்ல வாழ்க்கைத் துணையைத் தரும். மேலும் சில ரத்தினக் கற்கள் ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற்றம், இறை தரிசனம், ஆன்மீக சித்திகள் இவற்றைத் தரும்.
ரத்தினக் கற்களை அணிவதோடு மட்டுமல்லாமல் அவற்றை இறைவனுக்குச் சமமாக, ஒரு கோவிலில் உள்ள விக்ரகத்திற்க்குச் சமமாக அவற்றை மதித்துபூஜிப்பதால் நல்ல பலன் ஏற்படும். வகை வகையான பலன் நம்மை வந்துசேரும்.
சிந்தாமணி ரத்தினம் என்று ஒன்று உள்ளது. இது ஸ்வர்க்க லோகத்தைச்சேர்ந்த ரத்தினக் கல் ஆகும். குபேரனை போன்ற செல்வத்தையும் ஈஸ்வரனைப் போன்ற அந்தஸ்த்தையும் மஹா லக்ஷ்மியை போன்ற புகழையும் தரும்.எல்லாவற்றிற்கும் மேலாக இந்திரனுக்குச் சமமான அதிகாரம் வாழ்வு ஏற்படும். சிந்தாமணி ரத்தினம் எல்லா தேவதைகளையும் நம்மிடம் ஈர்க்கும் சக்திபடைத்தது.அம்பிகை லலிதா த்ரிபுர சுந்தரியின் பூரண ஆருளைப் பெற்றதுசிந்தாமணி ரத்தினம்.
சிந்தா + மணி = சிந்தாமணி ஆகும். ஆதாவது மனதில் ஏற்படும் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றுவதுதான் இந்த ரத்தினத்தின் அருள் ஆகும்.
நாம் அணிந்து கொண்டிருக்கும் ரத்தினத்தையும் இந்த சிந்தாமணி ரத்தினம் போல மாற்றலாம் என்று " மந்திர பத்ரிகா", என்ற பண்டைய நூலும், " ரத்தின பரிக்ஷா"என்ற ரத்தினக் கற்கள் பற்றிய நூலும் கூறுகின்றன. இதன்படி அம்பிகையின் அருள் இருந்தால் சாதாரண ரத்தினக் கல்லும் சிந்தாமணிரத்தினமாக மாறும்!!!.
சத்யபாமா பகவான் கிருஷ்ணனின் மனைவி. சத்யபாமாவின் தந்தை பேரரசன்.அவன் சூரியனை நோக்கி தவம் இருந்தான். சொல், செயல், சிந்தனை மூன்றும் ஒன்றாக ஆகி விட்டால் அதுதான் தவம். நீடித்த தவம் பெரும்சக்தியைத் தருகின்றது. அந்த சக்தி நம்மை சாதாரண நிலையிலிருந்து மேலே உயர்த்துகின்றது.
ஒரு தேவதையை தரிசனம் செய்ய வேண்டும் என்றால், அதாவது ஆயிரம் சூரியனுக்குச் சமமான ஒளி படைத்த அந்த தேவதை பார்க்க அதற்குச் சமமான சக்தி (Energy Body)இருந்தால் தான் அது நடக்கும். அவ்வாறு நடக்க அந்ததேவதையின் அருள்வேண்டும். இந்த அருளை சீக்கிரம் பெற "பரிபூரண சரணாகதி" நம்மிடம் ஏற்பட வேண்டும்.
உடல், மனம், வாக்கு அனைத்தும் தெய்வ நாமத்தை உச்சரித்தல் தெய்வீக சக்தி அதாவது, "தேவ சைதன்ய சக்தி" நம்மிடம் இருக்கும். தேவ சைதன்ய சக்தியை நம்முடைய உடலில் கொண்டு வர முடியும்.
இவ்வாறு அம்பாள் லலிதா த்ரிபுர சுந்தரியின் ஒரு மந்திரத்தை தொடர்ந்து ஜபம்செய்து வந்தால் நாம் அணிந்திருக்கும் ரத்தினக் கல்லும் சிந்தாமணி ரத்தினமாக மாறும்.
உதாரணமாக நீங்கள் அணிந்திருப்பது நீலக்கல் ஆக இருந்தால் அது சிந்தாமணி நீல ரத்தினம் ஆக மாறும்.
சிவப்பு கல் ஆக இருந்தால் அது சிந்தாமணி மாணிக்க ரத்தினம் ஆகும். இந்த சிந்தாமணி ரத்தினக் கல்லுக்கு 16 வகையான ஆகர்ஷண சக்திகள் உண்டு.அதாவது ஈர்ப்பு சக்திகள் உண்டு.
அவை பின் வருமாறு :
v . கர்ம ஆகர்ஷண சக்தி
v . புத்தி ஆகர்ஷண சக்தி
v . அகம்ஹார ஆகர்ஷண சக்தி
v . சப்த ஆகர்ஷண சக்தி
v . ஸ்பர்ஷ ஆகர்ஷண சக்தி
v . ரூப ஆகர்ஷண சக்தி
v . ரஸ ஆகர்ஷண சக்தி
v . சித்த ஆகர்ஷண சக்தி
v . கந்த ஆகர்ஷண சக்தி
v . தைர்ய ஆகர்ஷண சக்தி
v . ஸ்ம்ருதி ஆகர்ஷண சக்தி
v . நாம ஆகர்ஷண சக்தி
v . பீஜ ஆகர்ஷண சக்தி
v . ஆத்ம ஆகர்ஷண சக்தி
v . அம்ருத ஆகர்ஷண சக்தி
v . ஸர்வ ஆகர்ஷண சக்தி
1 .கர்ம ஆகர்ஷண சக்தி
கர்ம ஆகர்ஷண சக்தி என்றால் நாம் விரும்பும்எதையும் நமக்கு கிடைக்க தரும் சக்தியாகும் . அது பணமாக இருந்தால் பணம்வந்து சேரும் . நிலமாக இருந்தால் நிலம் வந்து சேரும் . அதிகார பூர்வமானபதவி வேண்டுமானது என்றால் பதவி வந்து சேரும். அல்லது ஒரு ஆணையோ அல்லதுபெண்ணையோ விரும்பினால் அதுவும் வந்து சேரும் . அல்லது செய்யும் தொழிலில்புகழ் வேண்டுமென்றால் பெரும் புகழ் கிடைக்கும். அரசியலில் முக்கிய பதவிவேண்டும் என்றால் பதவி கிடைக்கும். இச்சா சக்தி, கிரியா சக்தி , ஞானசக்தி ஆகிய மூன்று சக்திகளுமே இதில் அடங்கும். நமக்கு தகுந்த ஒருஇரத்தினக்கல்லை அணிவதாலும் சிந்தாமணி, மந்திரத்தை ஜபிப்பதாலும் இவ்வாறுநாம் நினைத்ததை அடைய கூடிய சக்தி ஏற்படும். இது போல மேலும் 15வகையானசக்திகள் ஒரு இரத்தினக்கல்லை அணிவதால் ஏற்படும்.
2 .புத்தி ஆகர்ஷணசக்தி
புத்தி என்பது நம்மை வழி நடத்தும் ஒரு சக்தியாகும். சித்தம் அகம்காரம் என்பது மனதில் மற்றும் இரண்டு சக்திகளாகும். ( நான் என்ற இருமாப்புகர்வம்தான் அகம்காரமாகும். சித்தம் என்பது எல்லா ஆசைகளுக்கும் அடிமையானதுஎன்பதாகும். இவற்றில் இருந்து விடுபட்டு மேலான பாதையில் செல்ல வைப்பதுதான் புத்தி சக்தியாகும். அதனால் தான் மந்திரங்களின் சிறந்த மந்திரமானகாயத்ரி மந்திரம் புத்தி சக்தியை தரும்படி கேட்கிறது. புத்தி ஆகர்ஷண சக்திஎன்றால் சிறந்த அறிவை நம்மிடம் ஈர்த்துக் கொள்ளகூடிய ஒரு சக்தியாகும்.
3 .அகம்ஹார ஆகர்ஷண சக்தி
தான் என்ற நினைப்பும் கர்வமும் தான் அகம்ஹாரம் ஆகும்சிந்தாமணி இரத்தினக் கல்லை அணிவதால் மற்றவர்கள் தங்களுடையகர்வத்தை விட்டு விட்டு பரிபூர்ணமாக நம்மை ஏற்றுக் கொள்வார்கள்.
4 .சப்தஆர்ஷண சக்தி
சிந்தாமணி இரத்தினத்தை அணிவதால், பலவகையான சப்தங்களைஆகர்ஷணம் செய்யும் சக்தி நமக்கு ஏற்படுகின்றது. இதை விவரமாக கூறினால் பலபக்கங்களுக்கு எழுத வேண்டி இருக்கும்.
சப்த ஆகர்ஷண சக்தி என்றால்……
Ø . தேவதைகள் அல்லது தேவர்கள் பேசி கொள்வதை நம்மால் புரிந்து கொள்ளமுடியும்.
Ø . தேவ பாஷை நமக்கு புரியும்.
Ø . தீய சக்திகளின்சப்தங்களை உணர்ந்து கொள்ள முடியும்.
Ø . அதை அழிக்ககூடிய சப்தமந்திரங்களும் நமக்கு மனதில் தோன்றும்.
Ø . பறவைகளின் பேச்சை புரிந்து கொள்ள முடியும்.
Ø . சாதாரண மனிதர்கள் பேசும் பொழுது அவர்களின் உள்ளத்தில் என்னஇருக்கின்றது என்பதை அறிய முடியும்.
Ø . கர்நாடக சங்கீதம் மற்றும் பலவிதமான இசை கருவிகளிலும் ஆர்வமும் தேர்ச்சியும் ஏற்படும்.
5 .ஸ்பர்ஷ ஆகர்ஷண சக்தி
ஸ்பர்ஷம் என்றால் தொடு உணர்ச்சி என்று பெயர் ஒருவரை தொட்டவுடன் அவருடைய கடந்த கால வாழ்வு, நிகழ்வு கால வாழ்வு, எதிர்கால வாழ்வுஎல்லாம் தெரிய வரும். அதை போல் தொட்டு ஆசீர்வதிப்பதால் மற்றவரின் விதியை மாற்ற முடியும். இந்த சக்தி சிந்தாமணி இரத்தினக்கல்லுக்கு உகந்தது.
6 .ரூப ஆகர்ஷண சக்தி
ரூபம் என்றால் பொருள் என்று பெயர். அழகான ஒருவருக்கு உள்ள கவரும் சக்தியே ( கவர்ச்சியே ) சிந்தாமணி இரத்தினக்கல் நமக்கும் தரும்.
7 .ரச ஆகர்ஷண சக்தி
ரசம் என்றால் பால் என்றும் சத்து என்று பொருள். மற்றவர்களின்வித்தையை அதன் சாரத்தை ஆகர்ஷிக்கும் சக்தியை சிந்தாமணி இரத்தினக்கல் நமக்கு தரும்.
8 .சித்த ஆகர்ஷண சக்தி
மற்றவர்களின் மனதில் இருப்பதை அறியும் சக்தியை சிந்தாமணிஇரத்தினக்கல் நமக்கு தரும்.
9 .கந்த ஆகர்ஷண சக்தி
கந்தம் என்றால் வாசனை என்று பொருள் . நம்முடைய உடலில் நல்ல வாசனைசிந்தாமணி இரத்தினத்தால் ஏற்படுத்தும் அதே போன்று ஒவ்வொரு உடலில் ஒரு வகையான வாடை வரும். ஒரு நபர் நம்மை பார்க்க வருகிறார் என்றால்அவர் வருவதற்க்கு முன்பாகவே அவருடைய உடல் வாடை நமக்கு தெரிய வரும்.
10 .தைரிய ஆகர்ஷண சக்தி
துணிச்சல் குணத்தை நமக்கு தரும். நம்மை பார்க்க வருபவர்களில்துணிச்சல் குணத்தையும் ஆகர்ஷிக்கும் சக்தியை சிந்தாமணி இரத்தினக்கல் நமக்கு தரும்.
11 .ஸ்ம்ருதி ஆகர்ஷண சக்தி
ஸ்ருதி என்றால் வேதம், புராணம் என்று பெயர். வேதத்தின் சாரத்தையும், புராணங்களின் சாரத்தையும் தெரிந்து கொள்ளும் சக்தியை சிந்தாமணிஇரத்தினக்கல் நமக்கு தரும்.
12 .நாம ஆகர்ஷண சக்தி
நாமம் என்பது பெயர் என்று பொருள் . நாம ஸ்மரணம் என்றால் இறைவனின் பெயரை ஜபிப்பது என்று அர்த்தம். நாம ஆகர்ஷண சக்தி என்றால் சதா சர்வகாலமும் இறைவனின் பெயரை ஜபிப்பது என்று பொருள். இந்த சக்தியை சிந்தாமணி இரத்தினக்கல் நமக்கு தரும்.
13 .பீக ஆகர்ஷண சக்தி
ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம் என்ற பீஜ மந்திரங்களை ஜபிப்பதால் ஏற்படும் பலன்களை சிந்தாமணி ரத்தினக் கல் நமக்குத் தரும்.
14 .ஆத்ம ஆகர்ஷண சக்தி
இது விவரிக்க முடியாத ஒன்று . இறை தரிசனம் என்றும் கூறலாம்.
15 .அம்ருத ஆகர்ஷண சக்தி
அம்ருதம் என்பது சாகாத் தன்மை தரும் உபாயம். இதை சிந்தாமணிரத்தினக் கல் நமக்கு கற்றுத் தரும்.
16 .ஸர்வ ஆகர்ஷண சக்தி
உலகில் உள்ள எல்லா நல்லவை அனைத்தையும் நமக்கு சிந்தாமணி ரத்தினக் கல் நமக்குத் தரும். இதில் அணிமா, மகிமா போன்ற 8 ஸித்திகளும் அடங்கும். சுருக்கமாகச் சொன்னால் சித்தர்கள் ஆகி விடலாம்.
இப்பேர்பட்ட 16 வகையான சக்திகளையும் நமக்கு நாம் அணியும் இரத்தினக்கலே தரும் பொழுது அதை சிந்தாமணி இரத்தினக்கல் என்று கூறுகிறோம். இந்த ஆகர்ஷண சக்திகள் சாதாரணமாக கிடைக்காது. பக்தி, சிரத்தையுடன் ஜபம் செய்ய வேண்டும். அதற்கான முறைகள் தரப்பட்டுள்ளன.
ஒவ்வொரு சக்தியையும் அடைய தந்திர வழிகள் உண்டு. அவைகளை விவரிக்கத் துவங்கினால் புத்தகம்500பக்கங்களைத் தாண்டி விடும். இந்த தந்திர பிரயோகங்களை என்னிடம் தீட்சையாகவே பெற முடியும்.
இரத்தினக்கல்லை, உடலில் மோதிரமாகவோ அல்லது டாலராகவோ அணிந்து கொண்டு சிந்தாமணி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். இவ்வாறு ஜபம் செய்ய செய்ய உரு ஏற ஏற நாம் அணியும் இரத்தினக்கல்லே சிந்தாமணி இரத்தினமாக மாறும். நாம் கேட்டதெல்லாம் தரும். அரசனுக்கு சமமான வாழ்வு அதிகாரம் எல்லாம் வந்து சேரும்.
இந்த சிந்தாமணி மந்திரத்துக்கு ரிஷி, ஸ்ரீ ஆதி சங்கரர் ஆவார். இதற்க்குஒருயந்திரமும் உண்டு. இந்த மந்திரத்திற்கான தேவதை ஸ்ரீ மாதா என்று அழைக்கப்படும் லலிதாம்பிகை ஆவார். இந்த மந்திரம் சௌந்தரிய லஹரியில் மூன்றாவது மந்திரமாகும்.
இந்த மந்திரத்தை தினமும் வடகிழக்கு முகமாக அமர்ந்து 2000 . முறை ஜபம் செய்ய வேண்டும். இவ்வாறு ஜபம் செய்வதால் நாம் அணிந்திருக்கும் இரத்தினமே, சிந்தாமணி இரத்தினமாக மாறிவிடும்.
இதன் யந்திரம் சமபக்க6முனை நட்சத்திரமாகும்.
நட்சத்திர முனைகள் சூலமாக இருக்கும். நடுவில் “ ஸ்ரீ ” என்ற லலிதா த்ரிபுரசுந்தரிமகா லெஷ்மியின் பீஜம் இருக்கும். தங்கத் தகட்டிலோ, வெள்ளித் தகட்டிலோ எழுதி வடகிழக்கு முகமாக உட்கார்ந்து ஜபம் செய்ய வேண்டும். தினமும்2000முறை ஜபம் செய்ய வேண்டும். இவ்வாறு 45 நாட்கள் ஜபம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் நாம் அணிந்திருக்கும் ரத்தினக் கல்லும் சிந்தாமணி ரத்தினக் கல்லாக மாறி நினைத்ததைத் தரும்.
' சிந்தாமணி மந்த்ரம் '
“அவித்யாநாம் அந்தஸ்திமிர மிஹிரத்வீபநகரீ
ஜடாநாம் சைதந்யஸ்தபக மகரந்தஸ்ருதிஜரீ
தரீத்ராணம் சிந்தாமணிகுணநிகா ஜன்மஜலதௌ
நிமக்நாநாம் தம்ஷ்ட்ரா முரரிபுவராஹஸ்ய பவதி”
அன்னை லலிதா திரிபுரசுந்தரியின் பாத தூசியே எல்லா விதமானபோகத்தையும் தரும். ஜனனம், மரணம் போன்றவற்றை தாண்டி, நித்தியமான மோட்சத்தை தன் பக்தர்களுக்கு தரும் லலிதா திரிபுர சுந்தரியின் கருணையே கருணை.
அன்னை அணிவிரல் மோதிரத்தில் “சிந்தாமணி”, என்ற ஒரு இரத்தினக்கல் உண்டு . அது அணிந்திருப்பவர்களுக்கு அளவற்ற. செல்வத்தை தரும். நாள் ஒன்றிக்கு ஒரு டன் அதாவது ஆயிரம் கிலோ இரும்பை தங்கமாக மாற்றும் சக்திபடைத்தது. இதே போன்ற மற்றொரு “ சிந்தாமணி இரத்தினம் ” இந்திரன் கையில் உள்ளது.
மூன்றாவது “சிந்தாமணி” இரத்தினம், “ஸ்யமந்தகமணி”என்ற பெயர் இதுவும் சத்ராஜித் என்ற மன்னரிடம் இருந்தது ஸ்ரீ கிருஷ்ணனின் மனைவியான சத்யபாமாவின் தந்தையே சத்ராஜித் ஆவான். அவன் சூரிய பகவானை நோக்கி நீண்ட காலம் தவம் செய்தான் அந்த தவத்தின் பயனாக சூரிய பகவான் “ஸ்யமந்தகமணி” என்ற சிவப்புக்கல்லை அதாவது மாணிக்ககல்லை (Ruby)- கொடுத்தார்.
நான்காவது சிந்தாமணி பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் கழுத்தை அலங்கரிக்கும் “கெளஸ்த்துப மணி” யாகும்.
அன்னை லலிதா திரிபுர சுந்தரியின் பாத தூளி (பாத தூசி) சிந்தாமணி இரத்தினத்திற்க்கு சமமானது சிந்தாமணி இரத்தினம் தினமும் பற்றிய“அவித்யாநாம்...................” என்ற ஸ்லோகத்தை சொல்வதானாலயேநாம் அணிந்திருக்கும் இரத்தினக் கல்லே சிந்தாமணி இரத்தினக்கல்லாக மாறுகிறது.
நாம் அணிந்திருக்கும் இரத்தினக்கல்லே நினைத்ததை தரும் சிந்தாமணி இரத்தினமாக மாற சில வழிகள் உண்டு. அதை குரு முகமாகவே கற்றுக்கொள்ள வேண்டும்.
காயத்திரி மந்திரம்:
ஓம் பூர் புவஸ்ஸூவ தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்|
mk;ghspd; fUiz ,Ue;jhNy mÛa KbAk;; !!!
&Ì vd;w khÛf;fk gw;wp;a kfpik !
ஸ்ரீ லலிதா த்ரிபுர சுந்தரி என்று வர்ணிக்கப்படும் தேவதையானஅம்பாளுக்கு ஆயிரம் நாமங்கள் (பெயர்கள்) உண்டு. இந்த ஒவ்வொரு நாமமும் ஒரு வித சக்தி கொண்டது. ஆயிரம் நாமங்களில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஜபம் செய்து வந்தால், அதாவது உச்சரித்து வந்தால் அந்த சக்தி நம்மை வந்து சேரும். இந்த ஆயிரம்பெயர்கள் கொண்ட தொகுப்புக்கு “ ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் ” என்று பெயர்.
எல்லா அம்பாள் கோவில்களிலும் மூன்று வேளைகளிலும் இந்த “லலிதா ஸஹஸ்ரநாமம்” தினமும் பாராயணம் செய்யப்படும்.
அம்பாளின் பலவித பெருமைகளையும், மகிமைகளையும் , சக்திகளையும் கூறும் இந்த “ ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்திற்கு ” ஸ்ரீ பாஸ்கரராயர் என்ற மகான் விளக்கஉரை எழுதியுள்ளார்.
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமமும் தேவியின் ஆக்ஞையினாலேயேஅவளுடைய அங்கதேவதைகளான எட்டு வாக்தேவிகளாலேயே இயற்றப்பட்டது. இந்த எண்மரின் பெயர்கள் : வசினி, காமேஸ்வர், மோதினீ, விமலா அருணா, ஜயினி, ஸர்வேச்வரீ, கௌலினி எனப்படுபவை. ஸ்ரீ சக்ரத்தில் ஏழாவது ஆவரணத்தில் உறையும் ரஹஸ்ய யோகினிகள் இவர்களைப் பற்றி தேவியே இந்த ஸ்தோத்திரத்தின் முற்பகுதியில் நீங்கள் எனது அனுக்ரகத்தினால் விசேஷமான வாக்குவன்மை படைத்தவர்கள். அது மட்டுமல்லாமல் என் பக்தர்களுக்கு வாக்குத் திறமையை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டவர்கள். என் நாமாக்களை எப்போதும் நினைத்துவருபவர்கள். எனவே என் பக்தர்கள் என்னை வணங்கி என்னருளை அடைவதற்காக என் பெயரையே அடையாளமாகக் கொண்ட பெயர்களையுடைய ஒரு ஸ்தோத்ரத்தைச் செய்யுங்கள் ” என்று அம்பாள் ஆசீர்வதித்தையடுத்து வஸினி முதலிய 8 வாக் தேவதைகளும் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தை செய்தனர்.
லலிதா ஸஹஸ்ரநாமத்தில் 14வது நாமமாக “குரு விந்த மணிச்ரேணி கனத் கோடீர மண்டிதா” என்று வருகின்றது. குருவிந்த மணி என்றால் ஜாதீ சிவப்பு மணி என்று அர்த்தம். மாணிக்கம் என்று தமிழில் அழைக்கபடுகின்றது. ஆங்கிலத்தில் ரூபி (Ruby)என்றும் ஜெம்மாலஜியில் (Gemmology)கொரண்டம் (Corundum)என்றும் அழைக்கப்படுகின்றது குருவிந்தம் என்ற வார்த்தையிலிருந்து தான் கொரண்டம்என்ற கிரேக்க வார்த்தை வந்தது. அது ஆங்கிலத்திலும் எடுத்துக் கொள்ளப்பட்டது. மாணிக்கம் 4 வகையானவை.
Ø பத்ம ராகம்
Ø ஸ்யமந்தகம்
Ø சௌகந்திகம்
Ø கௌஸ்துபம்
பத்மராகக்கல் அம்பாள் அணிந்திருப்பது ஆகும். எல்லா சக்திகளையும் கொண்டது.
ஸ்யமந்தகம் என்ற சிவப்புக்கல் சூரிய பகவானால் சத்யபாமாவின் தந்தை சத்யஜித்திற்கு தரப்பட்டது. இது ஒரு நாளைக்கு 1000 கிலோ இரும்பை தங்கமாக மாற்றும் திறன் படைத்தது. பசி என்பதே இருக்காது.
கௌஸ்துபம் என்பது ஸ்ரீ கிருஷ்ணர் தனது கழகத்தில் அணிந்திருப்பது. தெய்வீகத் தன்மை படைத்தது. வசிய சக்தியும் ஆகர்ஷண சக்தியும் படைத்தது.
சௌகந்திகம் என்ற ஜாதி சிவப்புக் கல் இன்று பூமியில் கிடைக்கின்றது . இதைத்தான் இன்று நாம் உபயோகிக்கின்றோம்.
சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் உள்ள படிக வளர்ச்சி மையத்தில் (Crystal Growth Centre)இவை பற்றி ஆராய்ச்சிகள் நடக்கின்றன.
இதே போல அமெரிக்காவின் பெனிசில் வேனியா பல்கலை கழகத்திலும் ஜெர்மன் நாட்டு பல்கலை கழகங்களிலும் ஆய்வுகள் நடக்கின்றன.
இன்று மருத்துவத்தில் லேசர் கதிர் கருவிகள் உபயோகிக்கபடுகின்றன. இதேபோல நவீன ஆயுதங்களும் லேசர் கருவிகள் பயன்படுகின்றன. இந்த லேசர் கருவிகளில் ஒரு காலத்தில்Yitrium - Aluminium - Garnetஎன்ற தாதுஉபயோகப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இன்று இதற்குப் பதிலாக ரூபி - சிவப்புக்கல் உபயோகப்படுத்தப்படுகின்றது. ஏனென்றால் ரூபியின் சிவப்புக்கல்லின் உருப்பெருக்க சக்தி சாதாரண வெப்பநிலையிலேயே அதிகமாக நடைபெறுகின்றது . இதனால் ரூபி - மாணிக்க கல் அணிந்தவுடன் உடலில் உஷ்ணமும் மாற்றமும் ஏற்படுகின்றது.
அம்பாளின் காலணியும், மாணிக்கத்தினால் ஆனதாக புராணங்கள் கூறுகின்றன.
"குருவிந்த மணி ச்ரேணி கநந் கோடீரமண்டிதா” என்றால்…..
ü குருவிந்தமணி என்பது பத்மராகம் எனப்படும் ஒரு சிவந்த கல். தேவியின் கிரீடத்தில் இந்த சிவப்புக் கற்கள் வரிசையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ü இந்த பத்மராகக் கற்களைக் தரிப்பதால் ஆசைகள் நிறைவேறும். நல்ல விஷயங்களில் பற்றுதல் ஏற்படும் காமம், அனுராகம், மங்களம், விஷ்ணு பக்தி இவை உண்டாகும் .
ü தேவியின் கிரீடம் கோடிரம் என்ற வகையைச் சேர்ந்தது இந்த அமைப்பு (டிஸைன்) கூந்தல் அழகும், அதன் மலரலங்காரங்களும் மறையாதபடி இருக்கும். ஆண்களின் கிரீடம் கேசம் மறையும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும். இதற்கு மகுடம், கிரீடம் என்று பெயர்கள்.
ü தேவியின் மேனிச் செம்மைக்கேற்றவாறு தாமரை போன்ற சிவந்த ரத்னங்கள் கிரீடத்தில் உள்ளன.
ü இந்த கிரீடத்தோடு கூடிய அம்பாளின் முகத்தை தியானிப்பதால் பக்தி அதிகரிக்கும் என்று குறிப்பிடப்படுகிறது. அம்பாளை தேவர்களும் பூஜை செய்கின்றனர். ஒவ்வொருவரும் ஒரு வகையான பூஜை செய்கின்றனர்.
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் 213வது நாமா “ மஹா பூஜ்யா” ஆகும்.
மஹா பூஜ்யா
( i ) பெருமை மிக்க பூஜைக்கு உரியவர்.
( i ) பூஜிக்கப்பட வேண்டியவர்களாகிய ப்ரஹ்மா, விஷ்ணு, ரூத்ரன் முதலியவர்களாலும் பூஜிக்கப்படுபவள்.
( iii ) மஹான்களை விடவும் பெரியவளாகையால் மஹதீ ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் இவர்களாலும் வணங்கப்படுவதால் பூஜ்யா, எனவே மஹதியாயும், பூஜ்யையாயுமிருப்பதால் மஹா பூஜ்யா.
( iv ) பத்ம புராணம், தேவி பாகவதம் இவற்றில் பல வகையான தேவர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையிலான மூர்த்தியிலோ யத்ரத்திலோ தேவியைப் பூஜிப்பதாக பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
( iv ) பத்ம புராணம், தேவி பாகவதம் இவற்றில் பல வகையான தேவர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையிலான மூாத்தியிலோ யத்ரத்திலோ தேவியைப் பூஜிப்பதாக பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
“சிவ ப்ரஹ்ம விஷ்ணுகுபேர விச்வதேர்வ வாயு
அக்நி சக்ரஸோம ஸூர்யக்ரஹ ராக்ஷய வீ மூர்த்தி பேதோ
மந்த்ரே சைலேந் த்ரநீல ஸ்வர்ண ரெளப்யபித்தலதா மஸ்ய
ஸ்படிக, மாணிக்ய முக்தோ பலப்ரவால வைடூர்ய த்ரபு ஸிஸவஜ்ர லோஹ”
இவற்றுள் அக்னி, சுக்ரன், சூர்யன் மூவரும் அம்பாளை மாணிக்கத்தினாலான சிலையாக வழிபடுவதாகவும் கூறப்படுகின்றது.
(v) ப்ரஹ்மாண்ட புராணத்தில் அறிந்தும் அறியாமலும் செய்யப்பட்ட எல்லா பாபங்களுக்கும் தேவியின் பாதாட்மரணமே ப்ராயச்சித்தம் தேவியின் பாதஸ்மரணமே ப்ரயோச்சித்தம் என்று கூறப்படுகின்றது. இதனால்“மஹாபூஜ்யா”என்று அழைக்கப்படுகிறாள்.
"காமனுராக குருவிந்தேஷஜு” என்று பத்ம புராணம் கூறுகின்றது. அதாவது உங்களுடைய மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேற வேண்டும் என்றான் குருவிந்தே மணியை வைத்துக் கொள்ள வேண்டும் என்று பத்மபுராணம் கூறுகின்றது.
குருவிந்தமணி ஐஸ்வர்ய விருத்தி, கார்ய ஸித்தி, சுத்துரு ஜெயம் என்ற மூன்றையும் ஒரங்கேதரவல்லது.
( i ) ஐஸ்வர்ய விருத்தி என்றால் பணப்பெருக்கம்
( ii ) கார்ய ஸித்தி என்றால் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி
( iii ) சத்துரு ஜெயம் என்றால் எதிரிகளை வெற்றிக் கொல்ல கூடிய சக்தி. ஆகையால் மாணிக்க கல் மிகுந்த சக்தி வாய்ந்தது என்பதை இதன் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.