No results found

    Opal - ஓபல்

    'லிப்ராராசிக்காரர்களுக்கு ஓபல்!

    உலகில் கிடைக்கும் ஓபல்
    (OPAL)கற்களில் 90விழுக்காடுஆஸ்திரேலியாவிலிருந்துதான் கிடைக்கின்றன. தெற்குஆஸ்திரேலியாவில் கூபர் பெடி (Cuber " Pedy)என்னுமிடத்தில்சுரங்கங்களுடன் வீடுகளும் நிலத்தக்கடியிலேயே உள்ளன.

     லைட்னிங் ரிட்ஜ் (Lightning Ridge)என்னுமிடத்தில் 2000கிரேட் எடையுள்ள கருப்பு ஓபல்கிடைத்தது. 1985ம் ஆண்டில் ஹாலிபின்! வால் நட்சத்திரம் வந்த போது தோண்டிஎடுக்கப்பட்டதால் இதற்கு ஹாலிவால் நட்சத்திரக் கல்" என்று பெயர்சூட்டினார்கள்.' இதனுடைய மதிப்பு30லட்சம் டாலர்.

     சமஸ்கிருதச் சொல்லான 'உபலகம்' என்ற சொல்லே, ஆங்கிலத்தில் OPALஎன்று வழங்கப்படுகிறது. உபலாஎன்றால் ரத்னக்கல் என்று பொருள். ஆனால் பழங்காலத்தில் இதை உபயோகித்தரோமானியர்கள் இதை இந்தியாவிலிருந்து வாங்கவில்லை. அவர்களுக்குசெக்கோஸ்லோவாகியாவிலிருந்து கிடைத்தது.

     16வது நூற்றாண்டில் மத்தியஅமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு ஓபல் வந்தது.

     1870க்குப் பின்னர் ஓபல்உற்பத்தியில் ஆஸ்திரேலியா முன்னணியில் நிற்கிறது.

     ஓபல் கற்களை நகைகளிலும், மெருகு ஏற்றும் பொருளாகவும் (Abracives), Insultation Productsஆகவும்பயன்படுத்துகின்றனர். இவை பல வர்ணங்களில் கிடைக்கின்றன. பால் நிறம், சாம்பல் நிறம், பச்சை, சிவப்பு, மஞ்சள், கறுப்பு வர்ணங்களில் இவைகிடைக்கின்றன. இந்த கற்களுக்குள் சிலிகா (மண்) குமிழ்கள் இருந்தால் அவைஒளியைச் சிதறடித்து மேலும் அழகு கொடுக்கும். கறுப்பு ஓபல்தான் மிகவும்விலை மதிப்புடையவை.

     துருக்கியிலும், மெக்சிகோவிலும் கிடைக்கும் தீ போன்ற சிவப்பு நிறமுடைய ( Fire Opal )கற்களை வைரம் போல பல முகங்களைக் கொண்டதாக பட்டை தீட்டிவிற்கின்றன. ஏனையவை ' Cone’வடிவத்தில் குமிழ் போல் வெட்டப்படுகின்றன.

     ஆஸ்திரேலியாவில் Sedimentaryபடிவப் பாறைகளில் இவை உண்டாகின்றன.  ஆனால் மெக்சிகோவிலும், எரிமலைப் பாறைகளின் வாயுக்குமிழ்களுக்கிடையே (Gas cavites in vocanic rocks )இவை காணப்படுகின்றன.

     உபரத்தினக் கற்களில் ஒன்றான ஓபல் ஒரு அற்புத கல்லாகும்.

     இது சிலிகானும் , தண்ணீரும் அதிகம் உடையது. இதன் கடினத் தன்மை 5.5முதல் 6.5வரை ஆகும். மிகஅற்புதமான வண்ணக் கலவைகளை உடைய ஓபல் கண்களுக்கு ஒருவிருந்தாகும். தீ ஓபல் ( Fireஓபல் ) என்ற கல்.

     Greenஓபல் - பச்சை ஓபல்என்பது கல்லின் உள்ளே பச்சை நிறத்தை முப்பரிமான கோணத்தில் அள்ளி வீசும்.Multi - Colourஓபல் என்பது பல வண்ணங்களை அள்ளி வீசும்.

     அன்றைய காலம்தொட்டு இன்றைய காலம் வரை ஓபல் ஒரு சர்ச்சைக்குரிய கல்லாக உள்ளது.

     இலவசமாகக் கிடைத்தாலும் ஓபலை அணியாதே என்கின்றனர் ஒரு சாரார்!

     ஆங்கிலஜோதிடத்தின் படி செப்டம்பர் 23ந் தேதி முதல் அக்டோபர் 22ந் தேதி வரை பிறந்தலிப்ரா (Libra)ராசிக்காரர்கள் இதை அணியலாம் என்று ஒரு சாரார்கூறுகின்றனர்.

     நமது பண்டைய பாரதத்தில் ரத்தின சாஸ்திரங்கள் 'ஓபலை' - 'உபலகம்' என்று வர்ணிக்கின்றனர்.

     'ஒபல்' கண்களுக்கு பிரகாசத்தை அளித்துவலுப்படுத்தக் கூடியது.

    'ஓபல்' இதயத்திற்கு சக்தியைத் தரக்கூடியது.

     தீ - ஓபல் ( Fire Opal )சக்தியைக் கொடுத்து மற்றவர்களைபுரிந்து கொள்ளும் தன்மையையும் தருகின்றது.உள்ளத்தை தூய்மைப்படுத்துகின்றது என எட்கார்கேசி என்ற பேரறிஞர் கூறுகின்றார்.

     தங்களுடைய ஒளிவட்டத்தில் (Aura)உஷ்ணத்தன்மைஇருக்குமானால்அவர்கள் தீ - ஓபலை அணியக்கூடாது?

     உங்களைச் சுற்றிற உள்ள ஒளி வட்டத்தில்உஷ்ணத்தன்மை உள்ளதா என்பதை எப்படி கண்டு பிடிப்பீர்கள்? !

     மிகவும் எளிது! இந்தியஜோதிட சாஸ்திரத்தின்படி மேஷம், ரிஷபம்,சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களின் ஒளிவட்டம் உஷ்ணத்தன்மை படைத்ததாகஇருக்கும்.

     பில்லி சூனியத்தை கண்டு பிடிக்கும்!

     விஷத் தன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் ஓபலை அணிந்தால் அக்கல் உடனடியாக பிரகாசத்தை இழக்கும்.இது போல ஏவல், பில்லி, சுனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஓபலை அணிந்தால் அது உள்ளொலியைஇழக்கும். இதே போல

    கெட்ட நண்பர்களின் முன்னிலையில் ஓபலின் ஒளி கூடும்.

     அதாவது ஓபல் மிகவும் நுண்ணிய அதிர்வுகளை எளிதாக ஈர்க்கக் கூடிய தன்மைபடைத்தது.

     ஒருவரின் உணர்ச்சியின் ஆழத்தை வெளிப்படுத்த கூடியது ' பல்'. நீதி, நல்லிணக்கம், பாதுகாப்பைத் தரக் கூடியது ஒபல் என புகழ் பெற்றஜெம்மாலஜிஸ்ட் ' ஆன்-ரீ-கோல்டன் கூறுகின்றார்.

     14 - வதுநூற்றாண்டிலும் சென்ற நூற்றாண்டிலும் லண்டனில் பல லட்சம் பேர் உயிரைச்சூறையாடிய 'பிளேக்' தொற்று நோயின் போது உயிரோடு இருந்தவர்களில் 90 சதவிகிதத்தினர் கைகளில் ஒபல் அணிந்திருந்ததாக வரலாற்றுச் சான்றுகள்கூறுகின்றன என லின்டா. கிளார்க் என்ற ஜெம்மாலஜிஸ்ட் கூறுகின்றார்.

    Previous Next

    نموذج الاتصال